

பாட்டி: Happy new year to all! 2023-ம் ஆண்டு, எல்லாருக்கும் ஒரு சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
மித்ரன்: Thank you பாட்டி.
பாட்டி: உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுறேன். நம்ம அன்பு அண்ணன் இருக்கிறான்ல. அவன் 10th public examination எழுதவில்லை, ஆனால் pass ஆகிட்டான். எப்படி?
இனியன்: பாட்டி, அது எப்படி சாத்தியம். வாய்ப்பே இல்லை.
உமையாள்: பாட்டி சொல்லுறது உண்மைதான்.
இசை: 2020 கரோனா சமயத்தில் exam எதுவும் இல்லை. அந்த நேரத்தில் எல்லாருமே all pass-ன்னு government அறிவிச்சதே. மறந்துட்டீங்களா!
இனியன்: ஆமாம். இப்போ ஞாபகம் வருது.
மித்ரன்: “ஆனால்” pass ஆகிட்டான்னு சொன்னீங்களே. இந்த இடத்தில் “But – ஆனால்” என்கிற conjunction-ஐ பயன்படுத்தலாம்தானே.
பாட்டி: அதுதான் இல்லை. Yet என்ற ஒரு conjunction இருக்கிறது. அதைத்தான் இங்கு பயன்படுத்த வேண்டும்.
இனியன்: அப்படியா?
பாட்டி: ஆமாம். But, Yet என்ற இரண்டு conjunction-க்கும் “ஆனால்” என்கிற meaningதான் வரும்.
“But – ஆனால்” என்பது இரண்டு மாறுபட்ட யோசனைகளை (ideas) இணைக்க பயன்படுகிறது. (Not really surprising)
“Yet - ஆனால்” மிகைப்படுத்தப்பட்ட (exaggerate) சூழ்நிலைகள், ஆச்சரியமான (surprising) அல்லது எதிர்பாராத (unexpected) தகவலை வலியுறுத்துவதற்கு உதவுகிறது. (Really surprising)
உமையாள்: முதல் sentence-க்கு contrast-ஆ இரண்டாவது sentence வரக் கூடிய இடத்தில் yet பயன்படுத்த வேண்டும். சரியா பாட்டி?
பாட்டி: You are right.
இசை: He didn’t write the exam, yet he got promoted to the next grade.
ButYetHowever (இருந்தாலும்)Nonetheless (ஆயினும்கூட)Common and general circumstances (பொதுவான சூழ்நிலைகள்)Usually, exaggerated circumstances
(மிகைப்படுத்தப்பட்ட சூழ்நிலைகள்)Contrast (மாறுபாடு)
Very strong contrast (வலுவான மாறுபாடு)
Not really surprising (உண்மையில் ஆச்சரியப்படுவதற்கில்லை)Really surprising (உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது)
ButYetShe is poor, but she is happy.
(அவள் ஏழை, ஆனால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.)He has lung cancer, yet he smokes daily. (அவருக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது, இருப்பினும் அவர் தினமும் புகை பிடிப்பார்.)
He writes slowly but neatly.
(அவர் மெதுவாக ஆனால் நேர்த்தியாக எழுதுவார்.)The car is old, yet surprisingly runs fast. (கார் பழையது, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக வேகமாக ஓடுகிறது.)He has a lot of money, but he never buys anything.
(அவரிடம் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் அவர் எதையும் வாங்குவதில்லை.)Deserts are dry, yet many varieties of plants grow there.
(பாலைவனங்கள் வறண்டிருந்தாலும், பல வகையான தாவரங்கள் அங்கு வளரும்.)
He stumbled, but he didn’t fall down. (அவர் தடுமாறினார் ஆனால் கீழே விழவில்லை.)He had broken both legs, yet he refused to stop running the marathon.
(அவரது இரண்டு கால்களும் உடைந்திருந்தாலும், மாரத்தான் ஓட்டத்தை நிறுத்த மறுத்துவிட்டார்.)
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்