கதைக் குறள் - 22: அடக்கத்தோடு இருந்தால் நன்மை அடையலாம்

கதைக் குறள் - 22: அடக்கத்தோடு இருந்தால் நன்மை அடையலாம்
Updated on
1 min read

பண்ணை வீட்டுத் தோட்டக்காரன் மிகப் பணிவாகவும், நேர்மையாகவும் இருந்தான். தினந்தோறும் செடி கொடிகளை பராமரித்து அழகான சோலையாக்கி வைத்து இருந்தான். பண்ணைக்காரரோ காலையில் நடைப் பயணமாக வரும் போது பூத்துக் குலுங்கும் பூக்களை பார்த்து ரசித்துவிட்டு தன் குழந்தைக்கும், இறைவனுக்கும் பூக்களை பறித்து போவது வழக்கம். ஒருநாள் தோட்டத்திற்குள் ஆடு வந்து மேய்ந்தது. அதை விரட்ட சென்ற தோட்டக்காரரிடம் மன்றாடி கெஞ்சியது. நான் ஒரு வாரமாக உண்ணவில்லை. வெயிலின் கொடுமையால் எங்கு தேடினாலும் இலை தழையைப் பார்க்க முடியவில்லை. மனிதர்களும் ஓட ஓட அடித்து விரட்டுகிறார்கள் என்றதும் மனிதாபிமானத்துடன் எங்க பண்ணையார் வருவதற்குள் உண்டு இடத்தை காலி பண்ணு என்றார்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் கழுதை வந்தது ஐயா ஐயா எனக்கும் அடைக்கலம் கொடுங்கள் ஐயா நீங்க நீண்ட காலம் நல்லா இருப்பீங்க என்றது. இதைக் கேட்டதும் பண்ணைக்காரனுக்கு மிக்க மகிழ்ச்சி ஒரு சின்ன சப்தம் கூட இல்லாமல் தேவையானதை உண்டு விட்டுப்போ என்றார். கழுதை சும்மா இருக்குமா? அதுக்கு சரியான வேட்டை. அந்த ஆரவாரத்துல கனைக்க தொடங்கியது. அந்த நேரம் பண்ணையார் வந்துவிட்டார். என்ன ஐயா நடக்குது. உன்னை நம்பி தானே இந்த தோட்டத்தையே ஒப்படைத்து இருக்கேன். நீ எனக்கு செய்கிற நம்பிக்கையா? என்று கடிந்து கொண்டார். ஐயா ஐயா மன்னிச்சிருங்க ஐயா. பசியின்னு வந்து கெஞ்சியதால் தேவையில்லாததை சாப்பிட்டு போகட்டுமே என்று உங்க அனுமதி இல்லாமல் விட்டுவிட்டேன். அதற்குள் ஆடு, கழுதையிடம் போய் வந்து அமைதியா சாப்பிட்டு போயிருந்தால் எல்லார்க்கும் நன்றாக இருந்து இருக்கும். நீ போட்ட ஆட்டத்தால் தோட்டக்காரன் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டாய் என்று சொன்னது. நாம் அடக்கத்தோடு இருந்தால் நன்மை அடையலாம். இல்லாவிடில் துன்பம் தான் நேரும்.

இதை தான் வள்ளுவர் அதிகாரம்:13ல்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்துவிடும். குறள்:121

என்றார்

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in