டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 23: பவர் சப்ளைக்கும் சிக்னலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் முக்கியம்!

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 23: பவர் சப்ளைக்கும் சிக்னலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் முக்கியம்!
Updated on
1 min read

எலக்ட்ரானிக்ஸும் பயணம் போலத்தான். ஆனால், இங்கே X மற்றும் Y மாறும் என்று கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். அது ஏன், எப்படி என்று இன்று விரிவாக விவாதிப்போம். இங்கு X என்பது எலக்ட்ரிகல் சிக்னல். Y என்பதும் எலக்ட்ரிகல் சிக்னல்தான். அது எப்படி என்று குழப்பமாக உள்ளதா? அதாவது எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரிக்கல் சிக்னலை உள்ளீடாக (INPUT) பெற்று அதனை பிராசஸ் (PROCESS) செய்து எலக்ட்ரிக்கல் சிக்னலாக வெளியே தருவது.

எலக்ட்ரிகலைப் பொறுத்தவரை பவர் சப்ளை மற்றும் சிக்னல் ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எலக்ட்ரிகளில் பவர் சப்ளை என்பது எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் இயங்குவதற்கு தேவையான சக்தியை தருவது. ஆனால், எலக்ட்ரிக்கல் சிக்னல் என்பது தகவல்களை தருவதற்கு மட்டுமே. சிக்னலால் எலக்ட்ரிக்கல் உபகரணங்களை இயக்க இயலாது. உதாரணமாக ஒரு கம்பியின் வழியாக எலக்ட்ரிக்கல் சிக்னலையோ அல்லது எலக்ட்ரிக்கல் சக்தியையோ அனுப்ப இயலும். நாம் வீட்டில் ஒரு சுவிட்சுடன் ஒரு மின் மோட்டாரை இணைத்து இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது இந்த பவர் சப்ளையானது மோட்டார் இயங்குவதற்கு தேவையான சக்தியை தரும். ஆனால், கீழ்க்கண்ட சர்க்யூட்டில் இணைப்பு படத்தில் நாம் மோட்டாருக்கு 1.5V மின்சாரத்தை தருகிறோம்.

ஆனால், மோட்டாருக்கு சக்தியை 1.5V பவர் சப்ளையால் தர இயலாது. நாம் இப்போது கீழ்க்கண்ட மின் இணைப்பை பார்க்கலாம்.

ஸ்விட்ச் S1-ஐ ஆன் செய்தால் 1.5 மின்விளக்கு ஒளிரும். ஸ்வீடசு S2-ஐ ஆன் செய்தால் மோட்டார் இயங்கும். ஆனால், S1-ஐ கொண்டு மோட்டாரை கட்டுப்படுத்த இயலாது. நாம் மோட்டாரை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம். இதற்கு நாம் ஒரு ஆபரேட்டரை நியமிக்கலாம்.

இந்த மின்விளக்கு ஆபரேட்டருக்கு சிக்னல் மட்டுமே தருகிறது. அதன் மூலம் அவர் ஆன் அல்லது ஆப் செய்து மோட்டாரை கட்டுப்படுத்த இயலும். சிக்னல் என்பது தகவலை தருவதற்கு மட்டுமே. அதைக் கொண்டு மின்சாதனங்களை இயக்க இயலாது.(தொடரும்) - கட்டுரையாளர்: பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர், தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in