

இந்நேரம் லாப நட்ட கணக்கை கடந்திருப்பீர்கள். அடிப்படையாக இந்த கணக்கை புரிந்துகொண்டால் ஏமாறாமல் இருக்கலாம். ஒரு பொருளை விலைக்கு வாங்குகிறீர்கள். அது முதலீடு. வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று அதை விற்கிறீர்கள். அது விற்கும் விலை. முதலீட்டை விட விற்கும் விலை அதிகம் எனில் அது லாபம். அதுவே குறைவாக இருந்தால் நட்டம். இரண்டும் சரிசமமாக இருந்தால் லாபமும் இல்லை நட்டமும் இல்லை.
முதலீடு லாபம் = விற்கும் விலை
ஆக, லாபம் = விற்கும் விலை - முதலீடு
சரி, இப்போது ஒரு சின்ன கணக்கு போடுவோம். வந்தியத்தேவன் ஒரு குதிரையை ரூபாய் 800-க்கு வாங்குகிறார். அதை இரண்டு கடைகள் தள்ளி ரூபாய் ரூ.1000-க்குவிற்கிறார். சிறிது நேரம் கழித்து அதே குதிரையை ரூபாய் 1300-க்கு வாங்குகின்றார். இன்னும் சில கடைகள் தள்ளி அந்த குதிரையை ரூபாய் ரூ.1600-க்கு விற்கிறார். வந்தியத்தேவனுக்கு இதில் லாபமா? நட்டமா? அல்லது நிகர லாபம் எவ்வளவு?
கீழே இருக்கும் விளக்கங்களைப் பார்க்காமல் மனக்கணக்கோ தாளெடுத்து கணக்கோ போடுங்கள். ஏமாற்றக்கூடாது. போட்டுட்டு வந்து கீழே படிக்கவும்.
விடைகள் இவற்றுள் ஒன்றாக இருக்கின்றதா? நட்டம் தான், லாபமும் இல்லை நட்டமும் இல்லை, ரூபாய் 200, ரூபாய் 300, ரூபாய் 400, ரூபாய் 500, ரூபாய் 800.
விளக்கம் 1: முதல் பரிவர்த்தனையில் 200 ரூபாய் லாபம், அடுத்து 300 ரூபாய் நட்டம் (1000-த்து விற்று 1300க்கு வாங்கினால் நட்டம்தானே), இதுவரை நட்டம் ரூபாய் 100 (200 – 300). கடைசி பரிவர்த்தனையில் ரூபாய் 300 லாபம். ஆகவே (300-100) = 200 ரூபாய். [நட்டத்தை -100 ரூபாய் எனக் குறிப்பிடலாம்]
விளக்கம் 2: முதல் பரிவர்த்தனையில் 200 ரூபாய் லாபம். 500 ரூபாய் மேலும் முதலீடும் போட்டு ரூ.1300-க்கு பொருள் (800 500), ஆகவே 500 ரூபாய் நட்டம். கடைசி பரிவர்த்தனையில் 300 ரூபாய் லாபம். ஆகவே 500 ரூபாய் லாபம், 500 ரூபாய் நட்டம். ஆகவே லாபமும் இல்லை நட்டமும் இல்லை.
சரியான விளக்கம்: முதல் பரிவர்த்தனையில் லாபம் : 200 ரூபாய் இரண்டாம் பரிவர்த்தனையில் லாபம் : 300 ரூபாய். ஆக மொத்தம் 200 300 = ரூபாய் 500 லாபம்.
விளக்கம் 1ல், 300 ரூபாய் கூடுதலாக வாங்குவது நட்டம் அல்ல, முதலீடு. மொத்த முதலீடு 800 300 ரூபாய். கடைசியாக கையில் இருக்கும் பணம் 1600. ஆகவே 1600-1100 = 500 (லாபம்).
விளக்கம் 2-ல் இருக்கும் தவறு 1300 ரூபாய் முதலீடு (அதில் ஏற்கனவே 200 ரூபாய் லாபம் இருக்கு), 1600-1300 = 300 ரூபாய் முந்தைய லாபம் 200 = 500 ரூபாய்.
இன்னும் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். இப்படி லேசாக கணக்கை மாற்றிக்கலாம். முதலில் வந்தியத்தேவன் வெள்ளை குதிரையை 800 ரூபாய்க்கு வாங்கி ரூ.1000-க்கு விற்கிறான். பின்னர் கறுப்பு குதிரையை ரூ.1300-க்கு வாங்கி ரூ.1600-க்கு விற்கிறான்.
மொத்த முதலீடு = 800 1300 = 2100
மொத்த விற்ற பணம் = 1000 1600 = 2600
லாபம் = விற்ற பணம் – முதலீடு = 2600 – 2100 = 500 ரூபாய்.
உங்கள் கையில் 2000 ரூபாய் உள்ளது என வைத்து கணக்கைத் திரும்ப போட்டுப்பாருங்கள் இதே விடை வருகின்றதா எனச் சரிபார்க்கலாம். சின்ன நாடகம் போலப் பரிவர்த்தனை செய்தும் பார்க்கலாம். (தொடரும்) - கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள், தொடர்புக்கு: umanaths@gmail.com