டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 22: பயணம் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் படிக்கலாம்!

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 22: பயணம் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் படிக்கலாம்!
Updated on
2 min read

எலக்ட்ரானிக்ஸ் என்றால் என்னவென்று பொறியாளர்களிடம் கேட்டால் நமக்கு பல்வேறு விதமான விளக்கங்கள் கிடைக்கும். ஒருவர் சர்க்யூட் போர்டு என்பார், மற்றொருவர் ட்ரான்ஸிஸ்டர் என்பார், சிலர் ஐ சி என்பர், சிலர் டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பற்றி கூறுவார்கள்.

ஆனால், நாம் பயணம் என்றால் என்ன என்று கேட்டால் அனைவரும் ஒரே பதிலை கூறுவர். அதாவது பயணம் என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது. யாரும் பஸ், கார், விமானம் ஆகியவற்றை பயணம் என்று கூற மாட்டோம். இந்த பயணத்தின் விளக்கம் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் பற்றி அறிந்து கொள்ள முயல்வோம்.

ஆரம்ப காலங்களில் பயணம் செய்ய நடந்தோம். பின்னர் சைக்கிள், பைக், கார், பஸ், ரயில், விமானம், கப்பல் என்று பல்வேறு விதமான வாகனங்களை யன்படுத்தினோம். ஆனால், நாம் பயணம் செய்ய உபயோகப்படுத்தும் வாகனங்களை பயணம் என்று கூறுவதில்லை. எவ்வளவு புதுப் புது வாகனங்கள் வந்தாலும் பயணத்திற்கான விளக்கம் மாறுவதில்லை. மீண்டும் நினைவுபடுத்துகிறோம் பயணம் என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது. X என்பது புறப்படும் இடம். Y என்பது சேருமிடம்.

சில சமயம் நாம் பயணத்திற்கு ஒரு வாகனத்தை மட்டும் பயன்படுத்துவோம். சில சமயம் பயணத்திற்கு பல வாகனங்களை பயன்படுத்துவோம். உதாரணத்துக்கு, நாம் சென்னையில் இருந்து துபாய் செல்கிறோம் என்றால் வீட்டில் இருந்து சென்னை விமான நிலையம் செல்ல காரை உபயோகிப்போம். சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் விமான நிலையம் செல்ல விமானத்தை உபயோகிப்போம். துபாய் விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு செல்ல காரை உபயோகிப்போம்.

இதை மேலும் விரிவாக்கினால் வீட்டின் உள்ளே இருந்து காருக்கு நடந்து சென்றோம். துபாயில் காரில் இருந்து ஹோட்டல் அறைக்கு நடந்து சென்றோம். இத்துடன் பயணத்தைப் பற்றி ஆராய்வதை விட்டுவிட்டு எலக்ட்ரானிக்ஸ் பற்றி ஆராயலாம். எலக்ட்ரானிக்ஸும் பயணம் போலத் தான். ஆனால் இங்கே X மற்றும் Y தான் மாறுகிறது. அது எப்படி என்பதை அடுத்த வாரம் விரிவாக பேசுவோம். - கட்டுரையாளர்: பொறியாளர், தொழில்நுட்ப பயிற்றுநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in