கதைக் குறள் 19: சிறுத்தை மீது சந்தேகம் கொண்ட சிங்கம்

கதைக் குறள் 19: சிறுத்தை மீது சந்தேகம் கொண்ட சிங்கம்
Updated on
1 min read

விரதத்தை முடித்த சிங்கராஜா மிகுந்த பசியோடு வேட்டையாட சென்றது. வழியில் கண்ணுக்கு எட்டியவரை எந்த மிருகமும் காணவில்லை. என்னடா இது நமக்கு வந்த சோகம் என்று எண்ணி வெகு தூரம் வந்துவிட்டது. அப்போது தெரிந்தோ தெரியாமலோ மான்கள் கூட்டமாகச் சென்றன. சிங்கத்துக்கோ அளவில்லா மகிழ்ச்சி. ஒரே பாய்ச்சலில் மான்களை வேட்டையாடி உண்டது. பிறகு தன் குகையை நோக்கி செல்லும்போது ஒரு ஓடையை கடந்தது. அப்போது நரியை பார்த்துவிட்டது. நரியோ மர நிழலில் மறைந்து கொண்டது. எங்கே ஓடி ஒளிந்து கொள்கிறாய். நாம் நண்பர்கள்தானே. பயப்படாமல் அருகே வா நரியிடம் சிங்கம் சொன்னது. நரியோ நாம் வகையாய் மாட்டிக் கொண்டோம். என்ன சொல்லி தப்புவது என்று எப்போதும்போல் தன் நரித்தந்திரத்தைக் கையாண்டது.

சிங்க ராஜா, சிங்க ராஜா நீங்க விரதம் முடிப்பதை அறிந்து கொண்ட சிறுத்தை எல்லா விலங்கினங்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டது. நம் சிங்க ராஜா நாளை விரதம் முடிந்து நம்மை வேட்டையாட வருவார். நாம் அவர் கண்ணில் மாட்டாமல் எல்லோரும் ஒன்றாக இணைந்து அவரை மடக்கிக் கொன்று விடுவோம் என்று சிறுத்தை சொன்னதாக நரி கூறியது. இதைக் கேட்ட சிங்க ராஜாவுக்கு கோபம் வந்தது. அப்படியா சொல்லியது? அதற்குப் பாடம் கற்பிக்கிறேன் என்று கர்ஜித்தது.

பிறகு குகைக்குச் சென்று ஆர அமர யோசித்துப் பார்த்தது. சென்றமுறை கூட நாம் வேட்டைக்குச் செல்லும்போது சிறுத்தை நமக்கு உதவி செய்ததே. ஆகையால் நம் நண்பன் அப்படி செய்யமாட்டானே. நாம்தான் நரி பேச்சை கேட்டு அவனை தப்பாக எண்ணி விட்டோம் என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டது. ஒருவர் நமக்கு சாகும் அளவிற்கு துன்பம் செய்ய முயன்றால்கூட அவர்கள் நமக்கு முன்பு செய்த ஒரு உதவியை எண்ணி அவர்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது என்பதைதான் வள்ளுவர்,

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும். குறள் -109

அதிகாரம் - செய்நன்றியறிதல்.

கட்டுரையாளர்:பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in