டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 20: அபாரமான மின்னணுவியல்

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 20: அபாரமான மின்னணுவியல்
Updated on
2 min read

நாம் இதுவரை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையான மின்சாரவியல் பற்றி பார்த்தோம். இனி அடுத்தபடியாக மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) பற்றி பார்க்க போகிறோம். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய சரியான அடிப்படையுடன் நவீன தொழில்நுட்பத்தை அணுகுவதே சாலச் சிறந்தது. எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பத்தை ஐந்து பிரிவுகளாக பிரித்துப் பார்த்தோம்.

உற்பத்தி (Generation).

பயன்பாடு (Utilization)

அனுப்புதல் (Transmission)

அளவீடு (Measurement)

கட்டுப்பாடு (Control)

இதில் மின்னணுவியல் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கட்டுப்பாட்டை இரண்டாக பிரிக்கலாம்.

சுவிட்சு (Switch )

ரெகுலேட்டர் (Regulator)

இப்பொழுது சுவிட்சை உபயோகித்து சில மின் இணைப்புகளை (Circuits) பார்ப்போம். இதன் மூலம் மின்னணுவியலை பற்றி புரிந்து கொள்ளலாம். முதலில் ஒரு சுவிட்சை உபயோகித்து ஒரு மின் விளக்கை கட்டுப்படுத்தலாம். பின்னர் இரண்டு அல்லது மூன்று சுவிட்சுகளை உபயோகித்து இரண்டு அல்லது மூன்று மின்விளக்குகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.

ஒரு சுவிட்சு ஒரு மின்விளக்கு:

இந்த மின் இணைப்பில் சுவிட்சு S மின்விளக்கு B-ஐ கட்டுப்படுத்துகிறது.

இரண்டு சுவிட்சுகள் இரண்டு மின்விளக்குகள்

இந்த மின் இணைப்பில் சுவிட்சு S1, மின்விளக்கு B1-ஐ கட்டுப்படுத்துகிறது மற்றும் சுவிட்சு S2 மின்விளக்கு B2-ஐ கட்டுப்படுத்துகிறது.

மூன்று சுவிட்சுகள் மூன்று மின்விளக்குகள்.

இந்த மின் இணைப்பில் சுவிட்சு S1 மின்விளக்கு B1-ஐ கட்டுப்படுத்துகிறது, சுவிட்சு S2 மின்விளக்கு B2-ஐ கட்டுப்படுத்துகிறது மற்றும் சுவிட்சு S3 மின்விளக்கு B3-ஐ கட்டுப்படுத்துகிறது. மேலே உள்ள இணைப்புகள் மிகவும் சுலபமானவை. ஆனால், இந்த இணைப்புகளைப் புரிந்து கொண்டால், மின்னணுவியலைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ளலாம். மின்னணுவியல் மிகவும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய தொழில்நுட்பம். அதிலும் நவீன மின்னணுவியல் மிகவும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது.

இந்த மின் இணைப்பில் சுவிட்சு S1 மின்விளக்கு B2-ஐ கட்டுப்படுத்துகிறது. சுவிட்சு S2 மின்விளக்கு B3-ஐ கட்டுப்படுத்துகிறது மற்றும் சுவிட்சு S3 மின்விளக்கு B1-ஐ கட்டுப்படுத்துகிறது.

இது தான் பொதுவாக நமது வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் மின் இணைப்புகள். - கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in