டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 19: மின்கட்டணத்தை குறைக்க உதவும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 19: மின்கட்டணத்தை குறைக்க உதவும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்
Updated on
2 min read

மின்விசிறி எவ்வாறு மின்சக்தியை பெறுகிறது என்பதை கடந்த வாரம் புரிந்து கொள்ள முயன்றோம். அது குறித்து மேலும் விரிவாக இப்போது பார்க்கலாம். 230W மின்சக்தி உள்ள நமது மின்விசிறி 57.5W மின்சக்தியைப் பெற்று அதற்கு உரிய காற்றை மட்டும் தரும். ஒரு மின்தடையை இணைப்பில் இணைத்து இருப்பதே இதற்கு காரணம்.

நாம் இணைத்திருக்கும் மின்தடையின் அளவு 230. அதன் ஊடே செல்லும் மின் ஓட்டம் 0.5A. ஆகவே மின்தடை உபயோகிக்கும் சக்தி 57.5W (0.5A x 0.5A x 230). ஆனால், மின்தடையை எதற்கும் உபயோகப்படுத்துவதில்லை அது பெறும் 57.5W மின்சக்தி வெப்பமாக மாறி வீணாகிறது. இந்த இணைப்பில் மின்விசிறி 57.5W மின்சக்தியையும் மின்தடை 57.5W மின்சக்தியையும் மின் சப்ளையில் இருந்து எடுத்துக் கொள்கிறது. ஆக மொத்தம் 57.5W 57.5W = 115W மின்சக்தியை மின்சப்ளையில் இருந்து பெறுகிறது.

ஆனால், அதில் 57.5W மின்சக்தி மின்தடையின் மூலம் வீணாகிறது. ஆனால், 57.5W மின்சக்தி மட்டுமே மின்விசிறி மூலம் காற்றின் ஆற்றலாக மாறுகிறது. இதுதான் பழைய தொழில்நுட்பத்தின் பிரச்சினை. மின்சக்தியை வீணடிக்காமல் மின்விசிறியின் மின்சக்தியை மாற்ற இயலாது. நாம் மின்தடையை மாறும் மின்தடையாக (Variable Resistor) மாற்றினால் மின்விசையினுடைய செல்லும் மின்னோட்டத்தின் அளவும் மாறும்.

மின்விசிறியின் ஊடே செல்லும் மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து மின்விசை பெறக் கூடிய சக்தியும் மாறும். ஆகவே அது தரும் காற்றாற்றலும் மாறும். இவ்வாறு மாறும் மின்தடை மின்விசிறியின் ஊடே செல்லும் மின் ஓட்டத்தின் அளவை கட்டுப்படுத்திவிடும். மின்விசிறியின் மின்சக்தியை கட்டுப்படுத்துவதால் மாறும் மின்தடையைதான் நாம் ரெகுலேட்டர் என அழைக்கிறோம்.

கைகொடுக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம்: பொறியாளர்கள் எவ்வாறு மின்சக்தியை மின் தடையில் வீணடிக்காமல் மின்விசிறியை கட்டுப்படுத்துவது என்று கண்டறிந்தார்கள். அதற்கு எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் மின்விசிறிக்கு தேவையான மின்னோட்டத்தை மட்டும் கொடுத்தார்கள்.

பழைய மின்தடை ரெகுலேட்டரில் மின்சப்ளையில் இருந்து 115W மின்சக்தி பெற்று 57.5W மின்விசிறிக்கும் 57.5W மின் தடையிலும் செலவாயிற்று. இதன் காரணமாக நாம் மின் சப்ளையிலிருந்து பெற்ற மின்சக்தியில் பாதி மின்தடையில் வீணாகிறது. அதற்கும் சேர்த்து நாம் மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்துகிறோம்.

ஆனால், இந்த எலக்ட்ரானிக் ரெகுலேட்டர் மின்விசையின் ஊடே செல்லும் மின்னோட்டத்தை மட்டும் மாற்றுவதால் மின்தடையில் வீணாகும் சக்தி தடுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஒரு மின்விசிறியில் இவ்வளவு சக்தி சேமிக்கப்பட்டால், நாடு முழுவதும் சேமிக்கப்படும் மொத்த சக்தியின் அளவை கணக்கிட்டு கொள்ளுங்கள். இது நவீன தொழில்நுட்பத்தின் மிகச் சிறிய உபயோகம்.

இந்த எலக்ட்ரானிக் ரெகுலேட்டரில் உள்ளே என்ன இருக்கிறது அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை வரும் வாரங்களில் தெரிந்து கொள்வோம். - கட்டுரையாளர், பொறியாளர், தொல்நுட்பப் பயிற்றுநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in