டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 18: நவீன தொழில்நுட்பத்தின் பயன்

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 18: நவீன தொழில்நுட்பத்தின் பயன்
Updated on
2 min read

நாம் இதுவரை நவீன தொழில்நுட்பத்திற்கு தேவையான அடிப்படைகளை பற்றி பார்த்தோம். இப்போது நவீன தொழில்நுட்பத்தின் முக்கிய பயனை தெரிந்து கொள்வோம். அதற்கு நாம் இதுவரை பார்த்த மின்விசிறி ரெகுலேட்டர் உதாரணத்தையே இதற்கும் எடுத்துக் கொள்வோம். படம் 1-ல் 230 வோல்ட் மின்னழுத்தத்தை நேரடியாக மின்விசிறிக்கு அளித்திருக்கிறோம்.

அதன் காரணமாக மின்விசிறி ஒரு குறிப்பிட்ட சீரான வேகத்தில் சுற்றும். உதாரணமாக மின்விசிறியின் சக்தி 230 வாட்ஸ் என்று வைத்துக் கொண்டால் மின்விசிறியின் ஊடே செல்லும் மின்னோட்டத்தின் அளவு 1A (230W/230V). நாம் ஏற்கெனவே படித்த படி மின்விசிறியின் மின்தடை மாறாது. மின்விசிறிக்கு தரும் மின்னழுத்தம் 230V, அதன் ஊடே செல்லும் மின்னோட்டம் 1A. ஆகவே மின்விசிறியின் மின்தடை 230 (230V/1A).



நாம் இப்போது படம் 2-ல் உள்ள இணைப்பைப் பற்றி பார்க்கலாம். இதில் நாம் மின்னழுத்தத்துக்கும் மின்விசிறிக்கும் இடையே ஒரு மின் தடையை இணைத்து இருக்கிறோம். 230W மின்விசிறியின் மின்தடை 230 நாம் மின்தடையின் (R) மதிப்பையும் 230 என்று வைத்துக் கொள்வோம் இப்போது மின்தடையும் (R), மின்விசிறியின் மின்தடையும் சேர்ந்து மின்னழுத்தத்திற்கு 460 மின்தடை தரும். ஆகவே இந்த இணைப்பில் செல்லும் மின் ஓட்டத்தின் அளவு 0.5A (230V/460).

இப்போது மின்விசிறி பெறும் மின் சக்தியை சக்தி சூத்திரம் (Power Law, P = V x I) படி பார்க்கலாம். நாம் தரும் மின்னழுத்தத்தை மின்தடை மற்றும் மின்விசிறி இரண்டும் பகிர்ந்து கொள்வதால் மின்விசிறிக்கு கிடைக்கும் மின் அழுத்தம் பற்றி தெரியாது. அது 230V ஆக இருக்க வாய்ப்பில்லை. 230V மின்னழுத்தத்தில் மட்டுமே மின்விசிறி 230W மின் சக்தியை பெற்று அதற்குரிய காற்றை தரும். ஆனால், நாம் இப்போது 230V மின்னழுத்தம் தராததால் மின்விசிறி குறைந்த மின் சக்தியைப் பெற்று மெதுவாக சுற்றும். நாம் இப்பொழுது மின்விசிறி எவ்வளவு மின் சக்தியை பெறுகிறது என பார்க்கலாம். மின்விசிறி மற்றும் மின்தடையின் ஊடே செல்லும் மின் ஓட்டத்தின் அளவு 0.5A. மின்தடையின் அளவு 230. மின்விசிறியின் மின்தடையின் அளவு 230.

சக்தி சூத்திரம் P = V x I;
ஒம்ஸ் வீதி. – V = I x R
ஆகவே P = V x I = I x R x I = I x I x R.

I = 0.5A, மின்விசிறியின் மின்தடை 230. ஆகவே மின்விசிறி பெறும் மின்சக்தியின் அளவு
P = 0.5A x 0.5A x 230 = 0.25 x 230 = 57.5W. இது குறித்து அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்

கட்டுரையாளர், பொறியாளர்,
தொழில்நுட்பப் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in