

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஊரில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து, அல்லது என்ன விழா என்றாலும் குழந்தைகளை நிறைய பார்க்கலாம். இப்போது கிராமங்களிலும் நகரங்களிலும் எந்த குடும்ப விழாக்களிலும் குழந்தைகளைப் பார்ப்பது மிகவும் அரிதாகிக் கொண்டே வருகின்றது.
விழாக்கள் இருக்கும் சடங்குகள், தேவையற்ற செலவினங்கள் மீது விமர்சனம் இருந்தாலும் அவை மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதற்கான சாட்சியங்கள். மனிதன் தனித்தனித் தீவாக மாறி வருகின்றான் என்பதற்கான குறியீடுதான் குழந்தைகள் இல்லாத திருவிழாக்கள்.
திருவிழாக்களுக்கான காரணம் ஒன்று தெரிவிக்கப்படும். கல்யாணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து என ஏதோ ஒன்று. ஆனால் அது எல்லோரும் கூடும் இடம். உறவுகளுக்குள் இணக்கம் உருவாகும். சண்டையும் உருவாகும். மனித மனங்களைப் புரிந்துகொள்ள மிகச்சரியான சந்தர்ப்பம்தான்.
அடுத்தமுறை உங்கள் வீட்டிற்கு அழைப்பிதழ் வந்தால் தயங்காமல் நானும் வருவேன் என்று சொல்லுங்கள். பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். நிகழ்விற்குக் கொஞ்சம் முன்னரேகூட செல்ல முயற்சி செய்யுங்கள். எல்லாவற்றையும் உற்று கவனியுங்கள். அங்கே வரும் சொந்தங்களை எல்லாம் தெரிகிறதா என பார்க்கவும். என்ன உறவுமுறைச் சொல்லி அழைக்க வேண்டும் எனத் தெரிகிறதா என் பார்க்கவும். ‘அங்கிள்’