

நண்டும் தவளையும் பேசிக்கொண்டனர். இந்த குளத்தில் நாளை மீன் பிடிக்க மக்கள் வருகிறார்கள். நாம் அடுத்த குளத்துக்குப் போவோம். காலையில மக்கள் கூட்டமாக கூட்டமாக வந்து மீன் பிடி திருவிழா கொண்டாடினார்கள். வேக வேகமாக நண்டும் தவளையும் நடையைக் கட்டினார்கள். வழியில், மீன்கொத்தி மறிச்சி எங்க போறீங்க நானும் வரேன்னு சொல்லியது. அதைக்கேட்ட நண்டு வேண்டவே வேண்டாம். எங்களுக்கு கிடைக்கும் உணவும் கிடைக்காமல் போகிவிடும். நீ எந்த மரத்தையாவது தேர்ந்து எடுத்துக் கொள் என்றது. உடனே தவளை இரக்கப்பட்டு எங்கள் குளத்துக்கு அருகில் பெரிய ஆல மரம் இருக்கு உனக்குத் தேவையான புழு பூச்சி எல்லாம் கிடைக்கும். எங்களுக்கும் நீ அருகில் இருந்தால் உற்சாகமாக இருக்கும். மீன்கொத்திக்கு ஒரே கொண்டாட்டம். ஆல மரத்திற்கு குடியேறியது.
நண்டு குளத்தில் இருந்து எட்டி எட்டி பார்த்து ஏ, மீன்கொத்தியே இன்றைக்கு எங்களுக்கு இரை கிடைக்கவில்லை என வருத்தமாக கூறியது. கொக்கு அக்கா கரையிலே இருக்கு. அது போன பிறகு இரையைத் தேடி தருகிறேன் என்று சொல்லி, தேடிக் கொடுத்தது. அந்த பக்கமாய் வந்த மீன் என்ன நண்டாரே எப்படி இருக்கீங்க மீன்கொத்தியின் டொக் டொக் சப்தம் இரவெல்லாம் உறங்க முடியவில்லை. எரிச்சலாக இருக்குது என்று மீன் அங்கலாய்த்து. நாம் ஒற்றுமையாய் இருக்க வேண்டுமென்றால் விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும் என்று நண்டு சொன்னது.
இதை மரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த மீன்கொத்திக்கோ அளவில்லா மகிழ்ச்சி. சரி சரி நாளை எங்க தலைவன் அயிரை ஐயா வருகிறார். இரவு நடக்கும் நாட்டிய நாடகத்துக்கு வாருங்கள். நான் மீன்கொத்தி நண்பருடன் வருகிறேன் என்று சொன்னது. மீன்கொத்தி மகிழ்ச்சியில் மரத்தில் பறந்து பறந்து விளையாடியது.
திடீரென்று கீழே அம்மா என்று கத்திக் கொண்டே விழுந்தது. அதைக் கண்ட நண்டு துடித்துப் போனது. மீன்கொத்திக்கு கட்டுப் போட்டு விட்டது. இரண்டு நாட்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தது. மீன்கொத்தியும் நண்டும் நண்பர்களானர்கள். நீண்ட காலம்மகிழ்ச்சியாக அந்தக் குளத்தில் வாழ்ந்தனர். மீன்கொத்தியோ தனக்கு உதவிய நண்டுக்கு மர பொந்துக்குள் இருந்த முத்து மாலையை பரிசாக வழங்கியது.
இதைத் தான் வள்ளுவர் தினைத்துணை.
நன்றி செய்யினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார். குறள்:104
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்