கதைக்குறள் 13: நம்மை வாழ வைக்கும் தெய்வம்

கதைக்குறள் 13: நம்மை வாழ வைக்கும் தெய்வம்
Updated on
1 min read

ஆகாஷ் குழாயில் இருந்து வழியும் நீரைப் பிடித்து ஆனந்தமாய் விளையாடிக் கொண்டு இருந்தான். வீட்டின் உள்ளே இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது. தண்ணீரை வீணாக்காதே. மழை பெய்து கொண்டு இருக்கிறது. வாளியில் தண்ணீர் பிடித்து வை என்றாள். சரி அம்மா என்று தண்ணீர் பிடிக்க ஓடினான். ஆஹா மழையில் நனைவது எவ்வளவு சுகமாக இருக்கு. இதில் கப்பல் செய்து விளையாடலாம் என்று தோன்றியது. உடனே வீட்டிற்குள் நுழைந்து காகிதக் கப்பல் செய்து மழையில் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அம்மா அதட்டலாக நான் சொன்ன வேலை செய்யாமல் என்ன செய்கிறாய் என்றவுடன் நினைவுக்கு வந்தவனாய் வேகமாக ஓடி மழை நீரைப் பிடித்து வந்தான். அம்மா அம்மா எனக்கு ஒரு சந்தேகம். இந்த மழை நீர் எப்படி அம்மா வருது என்றான். ஓ. அதுவா? கடல் நீர் ஆவியாகி மேகம் குளிர்ந்து மழை நீர் வானத்தில் இருந்து கொட்டுது. அந்த தண்ணீர் தான் மக்களுக்கு அமிழ்தமாக இருக்கு. சுத்தமான தண்ணீராகவும் இருக்கும்.

மழையை நம்பித்தான் ஏழை விவசாயிகள் இருக்காங்க. மழை நல்லா பெய்தால் தான் நோய் நொடி வராது. ஆறு, ஏரி, குளம் எல்லாம் நிரம்பி வழிந்தால் தான் நமக்கு மழை இல்லாத நேரத்தில் பயன்படும். பணத்தை வங்கியில் சேமிப்பது போல அணைக்கட்டில் மழை நீரைச் சேமித்து வைத்து நம் தேவைக்கு பயன்படுத்தலாம். அதனால் தான் அமிழ்தம் என்று சொல்கிறார்கள்.. அப்படி இல்லை அம்மா நம்மை வாழ வைக்கும் தெய்வம் என்று சொல்லுங்க. சரி தானே அம்மா. ஆமாம் கண்ணா. முன்பெல்லாம் மழை பெய்தால் விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ச்சியாக இருப்பேன். இனிமேல் அப்படி நினைக்கமாட்டேன் அம்மா. வருண பகவான் நமக்கு கொடுத்த கொடை என்பதை உணர்ந்து கொண்டேன் அம்மா என்று சொல்லிவிட்டு பள்ளிக்கு ஓடோடிச் சென்றான்.

இதைத் தான் வள்ளுவர், வான் சிறப்பு அதிகாரத்தில்

வான் நின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று. குறள்;11

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in