கதைக்குறள் 13: வந்த வேலைய பார்க்கணும்

கதைக்குறள் 13: வந்த வேலைய பார்க்கணும்
Updated on
1 min read

காட்டு வழியே வேடன் ஒருவர் சென்றபோது சுண் டெலி ஒன்று ஓடி வந்தது. அண்ணா, அண்ணா என்னையும் வேட்டைக்கு அழைத்துச் செல்லுங்கள் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்றது. வேறு வழியில்லாமல் வேடனும் சுண்டெலியை அழைத்துச் சென்றார். இருவரும் குளத்தருகே அமர்ந்து தேங்காய் கடித்து சாப்பிட்டனர். அப்போது சுண்டெலி இந்த தேங்காய் ருசியாய் இருக்கு என்றது. வேடனுக்கோ அவசரம். சுண்டெலியைப் பார்த்து வந்த வேலையைப் பார்க்க போகனும் வாயை மூடிக்கிட்டு வேகமாக வா என்று அதட்டினார். பிறகு இருவரும் காட்டிற்குள் வந்ததும். குயில் கூவும் சத்தம் கேட்டு அந்த வழியே நடந்தார்கள். ஒரு மரக் கிளையில் குயில்கள் மகிழ்ச்சியாக இருந்தன. திடீரென்று குயில்கள் ஒன்றாக கீழே இறங்கி இரையைத் தேடின. வேடன் இதுதான் சமயம் என்று வலையை விரிக்கப் போனான். அந்த சமயம் பார்த்து சுண்டெலி வேடனின் காலில் பிராண்டியது. வேடனுக்கோ சுண்டெலி மீது கோபம் வந்தது. ஓங்கி ஒரு உதை உதைத்தான். மீண்டும் வலையை விரிக்கப் போன போது குயில்கள் கூட்டமாக பறந்தன.

வேடன் அப்படியே இடிந்து உட்கார்ந்தான். என்னை நம்பி மனைவி பிள்ளைகள் சாப்பாட்டுக்கு காத்துக் கொண்டு இருப்பார்களே. கையில் கிடைத்ததை விட்டுவிட்டேனே என்று வருந்தினான். அப்போது சுண்டெலி அண்ணே அண்ணே வருத்தப்படாதே. இன்னொரு இடத்துக்கு அழைத்துப் போகிறேன் அங்கு இதை விட அதிகமாக பறவைகள் இருக்கு என்று ஆறுதல் சொன்னது. இருவரும் கொஞ்ச தூரம் சென்றதும் சுண்டெலி ஒரு பொந்திற்குள் நுழைந்து தங்க வளையல் மோதிரம் அள்ளி வந்தது. அதைப் பார்த்ததும் வேடனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. சுண்டெலியைப் பார்த்து நீ எனக்கு உதவி செய்ய வந்த கடவுள் என்று வாயார வாழ்த்தினான்.

நல்ல உள்ளம் கொண்டவர்க்கும் உண்மையான உழைப்புக்கும் என்றுமே துன்பம் இல்லை என்பதை உணர முடிகிறது. இதைத் தான் வள்ளுவர் ஆள்வினையுடைமை அதிகாரத்தில்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு. குறள்: 613

என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in