டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 13: விஞ்ஞானி ஓம்ஸின் முக்கிய கண்டுபிடிப்பு!

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 13: விஞ்ஞானி ஓம்ஸின் முக்கிய கண்டுபிடிப்பு!
Updated on
2 min read

விஞ்ஞானி ஜார்ஜ் ஓம்ஸ் பல நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு மின்னழுத்தம் (வோல்டேஜ் ), மின் ஓட்டம் (கரண்ட்), மற்றும் மின்தடை (ரெசிஸ்டன்ஸ்) ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை கண்டுபிடித்தார். இதுதான் பிற்காலத்தில் மின்சார மற்றும் மின்னணுவியல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது.

மின்னழுத்தத்தை வோல்ட் (volt) என்ற அலகாலும் (unit), V என்ற குறியீட்டாலும் குறிப்பிட்டனர். அதுபோல மின் ஓட்டத்தை ஆம்பியர் (ampere) என்ற அலகாலும், I என்ற குறியீட்டாலும் குறிப்பிட்டனர். மின்தடையை ஓம் (ohm) என்ற அலகாலும் R என்ற குறியீட்டாலும் குறிப்பிட்டனர்.
வோல்ட்டேஜ் V, கரண்ட் -I, ரெசிஸ்டன்ஸ் - R என்ற மூன்று அலகுகளும் மின்சார துறையை பற்றி அறிந்து கொள்ள மிகவும் தேவையானவை.
இப்போது ஓம்ஸ் கண்டுபிடித்த ஓம்ஸ் விதி (Ohm's Law) குறித்து தெரிந்து கொள்வோம். V= I x R. அதாவது மின் ஓட்டத்தையும், மின் தடையையும் பெருக்கினால் வருவது மின்னழுத்தம்.
மின்னழுத்தம்------- வோல்டேஜ்
மின் ஓட்டம்------- ஆம்பியர்
மின் தடை ------- ஓம்ஸ்
உதாரணமாக மின் ஓட்டம் 4 ஆம்பியர் என்றும், மின் தடை 3 என்றும் எடுத்துக்கொண்டால் மின்னழுத்தம் (வோல்டேஜ்) = 4 x 3 =12 வோல்ட்.
V= I x R அல்லது V=IR ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். இதனை கீழ்க்கண்ட படத்தின் மூலம் மேலும் சிறிது விவாதிக்கலாம்.

மின்னழுத்தத்தில் வோல்டேஜ் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மாறா மின்சாரம் (Direct Current - DC), மற்றொன்று மாறும் மின்சாரம் (Alternative Current – AC). இங்கு முதலில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது, மின்னழுத்த வித்தியாசத்தால் (Potential Difference) மின் உற்பத்தி நடக்கிறது. இதனை வோல்டேஜ் என்றும் V என்ற குறியீட்டாலும் அழைக்கின்றனர். இதன் அளவீட்டை volt என்ற அலகாலும் (Unit), V என்ற குறியிட்டாலும் அழைக்கின்றனர் வோல்டேஜ் (voltage) (V)= 6V (volt) இதனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவர்.

அனுப்புதல் (Transmission). இதனை மின் ஓட்டம் (கரண்ட்) என்று அழைக்கிறார்கள். இதனை I என்ற குறியிட்டால் குறிப்பிடுகிறோம். இதன் அளவை ஆம்பியர் (ampere) என்ற அலகாலும், A என்ற குறியீட்டாலும் குறிப்பிடுகிறோம்.

கரண்ட் current (I)= 2A இதனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவர். உபயோகம் (Utilization).

இதனை மின்தடை ரெசிஸ்டன்ஸ் என்று அழைக்கிறார்கள். இதனை R என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம். இதன் அளவை ஓம்ஸ் என்ற அலகாலும் ohm என்ற குறியிட்டாலும் குறிப்பிடுகிறார்கள். ரெசிஸ்டன்ஸ் (resistance) (R) = 3W இந்த மூன்றையும் கீழ்க் கண்ட இணைப்பு படத்தில் பார்க்கலாம்.
V = I x R


6V = 2A x 3W
மேலும் விளக்கமாக அடுத்த தொடரில் பார்க் கலாம்.

தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
தொடர்புக்கு:
balajeeseshadri@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in