கதைக்குறள் 12: தாய் சொல்லை தட்டாதே

கதைக்குறள் 12: தாய் சொல்லை தட்டாதே
Updated on
1 min read

மலையடிவாரத்தில் கோழி குப்பையைக் கிளறிக் கொண்டு இருந்தது. அந்த வழியாக பறந்து வந்த கழுகு ஒன்று கோழியைப் பார்த்து என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு கோழி இரை தேடிக் கொண்டு இருக்கிறேன் என்றது. என்னுடன் வா இரை தருகிறேன் என்று கழுகு அழைத்தது. கோழிக்குஞ்சு கழுகிடம், எங்க அம்மா யார் கூப்பிட்டாலும் போகக்கூடாது என்று சொல்லி இருக்காங்க. நாளை அம்மாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்றது. கழுகும் சரி என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.

அதற்குள் அம்மாவும் கோழிக் குஞ்சுவை தேடி வந்தது. அம்மா அம்மா இன்னைக்கு ஒரு நண்பனைப் பார்த்தேன். அவர் எனக்கு இரை தேடிக் தருகிறேன் என்னுடன் வா என்றார். நான் அம்மாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்றேன் என்று சொல்லியது. அதைக் கேட்ட அம்மாவும் கோழிக்குஞ்சுவிடம் அந்த அண்ணா எப்படி இருந்தார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு கழுகு பொல்லாதது, நீ அந்த இடத்திற்கு போகாதே என்று சொல்லியது. மறுநாள் கோழிக்குஞ்சு வருகைக்காக மலையடி வாரத்தில் கழுகு காத்திருந்து ஏமாந்து திரும்பியது. கோழிக்குஞ்சுக்கு கழுகு அண்ணாவைப் பார்க்கும் ஆசையில் தன் நண்பர்களை மலையடி வாரத்திற்கு அழைத்தது. வரலை நீ போ என்று சொன்னார்கள். உங்களுக்கு சாக்லேட் தருவார்கள் என்று சொன்னதும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சென்றார்கள்.

கழுகு தூரத்தில் கோழிக்குஞ்சு கூட்டம் வருவதைப் பார்த்து மகிழ்ச்சியானது. வாங்க செல்லங்களா, எப்படி இருக்கிறீங்க என்று நலம் விசாரித்தது. அப்பாவி குஞ்சுகள் நயவஞ்சக கழுகை நண்பன் என ஏமாந்து அதனுடன் சென்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோழிக்குஞ்சை அடித்து தின்றது கழுகு. அம்மா சொல்வதை கேட்காமல் சென்றதால் வந்த கேடு என்பதை உணர்ந்து நாம் கூடா நட்பு கொள்ளக்கூடாது.

இதைத்தான் வள்ளுவர் கூடா நட்பு அதிகாரத்தில்,

நட்டார் போல் நல்லவை சொல்லாகும்

ஒட்டார்சொல் எல்லை உணரப்படும். : குறள்:826

என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in