வெற்றி நூலகம்: கடைசி பெஞ்ச்
ஓங்கில் கூட்டம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை பெரியசாமி எழுதியுள்ளார். கவிதைகள் நூல் வரிசையில் பதின்ம வயதொத்த குழந்தைகள் வாசிக்க நல்லதொரு தொகுப்பு. கடைசி பெஞ்ச் இளையோருக் கான கவிதைகள் என்ற இந்தநூலின் அட்டைப் படம் ஒவ்வொருவருடைய பள்ளிக் காலத்தையும் நினைவுபடுத்துகிறது. பதின்மவயதுக் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள், என்ன சிந்திக்கி றார்கள், தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பன கவிதை வரிகளில் மிளிர்கின்றன.
கண்ணீர் கரைத்த தவறு என்ற கவிதையின் வரிகள் நெகிழ வைக்கின்றன. கடைசி பெஞ்ச் என்பது ஒரு கவிதையின் தலைப்பு தான். பாடம் முடித்த ஆசிரியர், பசங்களிடம் கேள்வி கேட்டார். அணில் அங்கே தான் இருக் கென்றான். எரிச்சலடைந்தவர், எழுந்து பின்னால் போடா என்றார். இந்த கவிதை ஒவ்வொரு மாணவர் மனதிலும் ஆசிரியர் மனதிலும் வாசிக்கக் கூடியவர்கள் மனதிலும் வெவ்வேறு சொந்தக் கதைகளை, அனுபவங்களை சொல்லிச் செல்லும்.
குழந்தைகளுக்கான உளவியல்: புரிந்துகொள்ள, விவாதிக்க, உரையாட மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒரு நல்ல புத்தகம். நிகழ்கால சமூகத்தில் குழந்தை உளவியலை பதிவு செய்யக்கூடிய ஒரு ஆவணமாகவும் இதனை பார்க்கலாம். குழந்தைகளிடம் வாசிப்பை எடுத்துச் செல்வதற்கு பல வழிகள் நமக்கு தேவைப்படு கின்றன. கதைகளாக, சிறு பாடல்களாக, கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல பரிமாணங்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்குமான உறவு குறித்து ஒவ்வாமை என்ற தலைப்பில் மிக அழகான வரிகள் தரப்பட்டுள்ளன. வகுப்பாசிரியை எதற்கெடுத்தாலும் யாருடனாவது ஒப்பிட்டே பேசுறாங்க... ஒவ்வாமையா இருக்குப்பா. இயல்பாகவே குழந்தைகள், கவிதை வாசிக்க எண்ணுவார்கள். அவர்களுக்கு, அவர்களது மொழியிலேயே, அவர்களுடைய சிந்தனையிலேயே உதித்த இந்தக் கவிதைகளை வாசிப்பது தனி சுவாரஸ்யம்தான். பயிலக்கூடிய குழந்தை களுடைய மனப்போக்கு, வாசிக்கும் குழந்தையினுடைய மனப் போக்கு இரண்டையும் மெல்லிய உணர்வுகளால் இணைத்து ரசிக்க வைக்கிறது. அரசு பள்ளி ஆசிரியை கல்விச் செயல்பாட்டாளர்
