சிறுகதை: மூக்கை நுழைத்த ஜெமிம்மா ஒட்டகச்சிவிங்கி

சிறுகதை: மூக்கை நுழைத்த ஜெமிம்மா ஒட்டகச்சிவிங்கி
Updated on
1 min read

ஜெமிம்மா என்பது, மிகவும் உயரமான ஓர் ஒட்டகச்சிவிங்கி. ரப்பர் செடிகளைப் போல நீண்ட வளைந்த கழுத்துடையது. அடுத்தவர் வாழ்வை அறிந்துகொள்ளும் அதீத ஆர்வமும், புறணி பேசும் குணமும் உள்ள ஜெமிம்மா மாதிரியான ஒரு விலங்கை, அதுவரை எந்த விலங்குமே பார்த்ததில்லை.

ஜெமிம்மாவின் இந்தக் குணத்தால் எல்லா விலங்குகளும் எரிச்சலுற்றன. நல்லஉயரமும், நீளமான கால்களும், வளைந்த கழுத்தும் இருந்ததால், ஜெமிம்மா நுழையாத கூடோ குகையோ இல்லை. அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிவதில் அதீத ஆர்வத்துடன் நடந்து கொண்டது. இது, சூழலை மிகவும் மோசமாக்கியது.

குரங்குகளிலேயே மிகவும் முக்கியமான பிக் போங்கோ குரங்கு, கைவிடப்பட்ட பழையகுகைக்குள் செல்ல முடிவெடுத்தது. காட்டில் இருந்ததிலேயே, இதமான, வசதியான இடமாக அக்குகை மாறும்வரை உழைத்தது.

ஜெமிம்மா ஒருநாள் இரவு, கால் பெருவிரல் ஊன்றி நடந்து அங்கு சென்றது. ஜன்னல் கதவு வழியே கழுத்தை உள்ளே நீட்டியது. அப்போதுதான் படுக்கை அறையிலிருந்து சென்றுகொண்டிருந்த பிக் போங்கோவை ஜெமிம்மா பார்த்தது. பின்தொடர முடியாது என்கிற சூழல் வரும்வரை அதை பின்தொடர்ந்தது. அதற்கு மேல் கழுத்து நீளமாக இல்லை. பிக் போங்கோ வீடு முழுவதும் ஓடியது. ஜெமிம்மாவின் கழுத்து வசமாக மாட்டிக்கொண்டதால் மிகவும் சங்கடப்பட்டது. இனிமேல், மற்றவர்களின் வாழ்க்கையில் தன் நீண்ட கழுத்தைநுழைப்பதைவிட, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அதைப் பயன்படுத்த அப்போதே முடிவெடுத்தது.

தமிழில்: சூ.ம.ஜெயசீலன்

sumajeyaseelan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in