

சுற்றுச்சூழல் குறித்து தொடர்ந்து நாம் பேசி வருகிறோம். ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய சில செயல்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. அதனால் கடல் நீரின் தன்மை மாறுகிறது. கடலின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கிறது.
கடலின் பாதிப்புகளை அங்கு வாழும் மீன்கள் வழியாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது இப்புத்தகம். நம்மையெல்லாம் கடலுக்குள் ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் புத்தக ஆசிரியர் சரிதா ஜோ.
கடற்கரைக்கு சென்று விளையாடுவோம். காற்று வாங்குவோம்.ஆனால், கடல் வாழ் உயிரினங்கள் அடையும் அவலங்களை அறிந்துள்ளோமா? இல்லை என்பதே நமது பதிலாக இருக்கும். நிலப் பகுதியில் வாழும்
மனிதனைப் போலவே கடலில் வாழும் உரிமை பெற்றவை அவை.கடலுக்குள் வாழும் உயிரினங்கள் இந்த மனித குல சமுதாயத்தினால் அடையக்கூடிய துன்பங்கள் குறித்து இப்புத்தகம் மிக அழகாக கதை வடிவில் சொல்கிறது.
மனிதர்கள் படித்து ஆராய்ச்சி செய்வதைப் போலவே கடலுக்குள் மீன்களும் ஆராய்ச்சி செய்கின்றன. வெண்ணிலா என்றஅம்மா மீன் தான் ஆராய்ச்சியாளர். யாழினி, தீரன் ஆகிய குட்டி மீன்கள் வழியாகக் கதை உற்சாகமாக நகர்கிறது.
கடலுக்குள் அப்படி என்ன மர்மம் நிறைந்திருக்கிறது? பெர்முடா முக்கோணம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? கடல்வாழ் உயிரினங்களில் நீண்டகாலம் வாழக்கூடியது, மிகப்பெரியது என நீளும் பட்டியலுக்கு
இந்த புத்தகத்தில் பதில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி முடிந்து எல்லா சிலைகளையும் கடலில் கரைப்பதைப் பார்க்கிறோம். அதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறதா?இல்லையா?
இப்படி உங்கள் சந்தேகங் களுக்கும் சிந்தனைக்கும் தீனி போடும் புத்தகம்தான் கடலுக்குள் மர்மம்.
கட்டுரையாளர்: கல்விச் செயற்பாட்டாளர்