

செம்பனூர் கிராமத்தில் கண்ணப்பன் என்ற முதியவர் மரங்களை நட்டு சோலையாக்கி மகிழ்வார். படிக்கும் பிள்ளைகளிடம் மரத்தின் அருமையை சொல்லிக் கொண்டே இருப்பார்.
முதியவரின் பேரன் மாணிக்கம் மாலை பள்ளி விட்டு வந்த உடன் அம்மா தண்ணீர் தண்ணீர் என்று கத்திக் கொண்டே வந்தான். அதற்கு தாத்தா நீரின் அவசியம் இப்போ உணர முடியுதா? எப்பவும் நீரை வீணாக்கக்கூடாது, மழைக் காலத்தில் வரும் நீரையும் சேமிக்கலாம் என்றார். மரம் மழை மட்டும் தான் தருமா என்று குழந்தைத்தனமாய் கேட்டான் மாணிக்கம். நாம் சுவாசிப்பதற்கு காற்றை தருகிறது. மழை தான் நமக்கு உணவாகப் பயன்படுகிறது.
ஒரு வருடம் மழை பெய்யாமல் பொய்த்தாலும் விவசாயம் செய்ய முடியாது. நாம் எல்லாம் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இன்றைக்கு உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து இருக்கு. எங்க அப்பா வாழ்ந்த கிராமத்துக்கு அழைத்துப் போகிறேன் என்றார்.
இருவரும் ஊரை அடைந்ததும், ஊர் பெரியவர்கள் மழையெல்லாம் நன்கு பெய்ததா? என்று கேள்வி மேல் கேள்வியாய் கேட்க, கண்ணப்பன் எங்க ஊருக்குள்ள இருக்கும் மரத்தை தான் மனிதர்கள் வெட்டி சாய்ச்சி ராங்களே அதனால் மழை எங்க பெய்யுது என்று வருத் தப்பட்டார். அதற்குள் மாணிக்கம் காண கிடைக்காத மர வகை எல்லாம் தாத்தாவிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
மறுநாள் பள்ளியில் தன் நண்பர்களிடம் பேசும்போது கிராமத்தில் மரத்தை பொக்கிஷமாய் மதிக்கும் மனிதர்களை பற்றி எடுத்துக்கூறி, “நாமும் மரம் வளர்த்து மழை பெய்ய உதவுவோம்” என்றான்.
ஆடு மாடு எல்லாம் வறண்ட பூமியில் தண்ணீர் இல்லாம கஷ்டபடுதுங்க. எல்லா உயிரினமும் உயிர் வாழ நாம் கை கொடுப்போம் என்றான் சுந்தர். இன்றிலிருந்து மழை நீரை பிடித்து சேமித்து வைக்கப் போறேன் என குழந்தைகள் பேசிக்கொண்டனர். இதிலிருந்து மழை உணவாக பயன்படுவதை அறிய முடிகிறது
இதைத் தான் வள்ளுவர்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை என்றார்
வான் சிறப்பு அதிகாரம் குறள்12
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை