

கண் இமைக்கும் நேரத்தில் நான்கு சக்கர வாகனம் சஞ்சையை தூக்கி வீசி சென்றது. மருத்துவர்கள் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமும் நண்பர்கள் குழுமமும் இணைந்து சஞ்சய்க்கு மாற்றுக் கண் கொடைக்கு ஏற்பாடு செய்து தந்தனர். மருத்துவர்களுக்கே வியப்பாக இருந்தது.
நாங்கள் மாற்றுக்கண் அறுவை சிகிச்சைக்கு பலமுறை தடுமாறி இருக்கோம். உங்க மகனுக்கோ உடனடியாக கிடைத்துவிட்டதே என்று சஞ்சய் பெற்றோரிடம் கூறினர். சஞ்சய் சிறுவயதில் இருந்தே உதவி செய்யும் குணம் உள்ளவன். அவனுக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வருத்தப்பட்டு பெற்றோர் மருத்துவரிடம் கூறினர்.
அவன் செய்த உதவிதான் உயிரைக் காப்பாற்றி இருக்கு என்று மருத்துவர்கள் ஆறுதல் கூறினார். தர்மம் தலை காக்கும் என்பார்களே அதுதான் எங்கள் மகனை காப்பாற்றி உள்ளது என்று ஆசுவாசம் அடைந்தனர். சஞ்சய் தனக்கு உதவிய நண்பர்ளுக்கு நன்றி தெரிவித்தான்.
அன்று முதல் சாலை விழிப்புணர்வை கையில் எடுத்துக்கொண்டு பள்ளி தோறும் கூட்டம் போட்டு மாணவர்களிடம் பரப்புரை செய்தான். அப்போது அங்கேஆகாஷ் என்ற குட்டி பையன், “எங்க அப்பா கண் தெரியாமல் அவதிப்படுகிறார். சரி செய்யலாமா?” என்று கேட்டான். அன்று மாலையே ஆகாஷ் அப்பாவை சந்தித்து அவருக்கு பார்வை சரி செய்ய ஏற்பாடு செய்தான்.
வீடு திரும்பிய ஆகாஷ் அப்பா, சஞ்சையை சந்தித்து, எங்களைப் போன்ற ஏழைக்கு கடவுளாய் வந்து உதவி செய்த உன்னை மறக்கவே மாட்டோம் என்்றார்.
இதை வள்ளுவர், செய் நன்றியறிதல் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. குறள் (105)
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை