

அந்தி சாயும் நேரம். அழகிய மேகம், நிலவு அக்காவிடம் சென்று, "சூரியன் மாமாவை எங்கே ஒளித்து வைத்து இருக்காய்? என் நட்சத்திர தோழர்கள் நான் கண்டுபிடித்துக் கொடுத்தால் எனக்கு அழகான வானத்தையே எழுதி தருகிறார்களாம்.
நான் உனக்கும் பங்கு தருகிறேன்" என்றது. அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த நிலா அக்கா, "சரி சரி உனக்கு சூரியன் மாமாவைக் காட்டுகிறேன். ஆனால், என்னோடு பல மைல் கடலைக் கடக்க வேண்டும் அம்மா, அப்பாவைக் கேட்டு அழக்கூடாது" என்று நிலா அக்கா சொன்னது.
இருவரும் நீண்ட தூரம் பயணம் செய்ததால் களைப்பாகி உறங்கிவிட்டனர். திடீரென்று சூரிய ஒளி உடலில் படவே எழுந்து விட்டது மேகம் அண்ணா. இதுதான் சமயம் என்று நிலா அக்கா, “நாம் சூரியன் அருகிலே வந்துவிட்டோம். அதோ பாரு இரண்டு மலை களுக்கு நடுவே மாமா கண் சிமிட்டுகிறார்” என்றது.
“இல்லை! இல்லை! நீ என்னை ஏமாற்றுகிறாய் சூரியன் வந்ததால்தான் காலைப் பொழுது புலர்ந்து உள்ளது. அதோ மலர்கள் மலர்ந்து அழகாக காட்சி தருகிறது. விவசாயி ஏர் கலப்பையை எடுத்துச் செல்கிறார். கோழி கூவுது. பறவைகள் கூட்டைவிட்டு இரை தேடி பறந்து செல்கிறது.
உன்னை நல்ல நண்பன் என்று நினைத்தேன். என்னை ஏமாற்றிவிட்டாய். நீ காணாமல் போய் விடுவாய்” என்று சாபம் விட்டது. அன்று அமாவாசை என்பதால் நிலவும் வரவில்லை. இதைக் கண்டு தன் நட்சத்திர தோழர்களிடம் நான் நிலவை மறைத்துவிட்டேன் என்று எகத்தாளமிட்டது.
இதைத்தான் வள்ளுவர்...
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
(அதிகாரம்:கூடாநட்பு குறள் எண்:825)
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை