

காலத்திற்கு தகுந்தவாறு ஊடக படிப்புகளும் மாறிவருகின்றன. ஊடகத்தின் தேவையும் வேறுவிதமாக மாறிவிட்டது. முன்பு போல் அல்லாமல் பல மனிதர்கள் செய்ய வேண்டிய வேலை, இன்று ஒருவருக்குக் கொடுக்கப்படுகிறது. அவருக்கு அத்தனை வேலைகளும் தெரிந்தால் மட்டுமே ஊடக நிறுவனத்தில் நிலைத்திருக்க முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இன்று ஒரு ஊடக மாணவருக்கு எழுத மட்டும் தெரிந்தால் போதாது. ஆடியோ மற்றும் வீடியோ எடிட் செய்யவும், நன்றாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும், கேமராவை கையாளவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒரு காலத்தில் விஷுவல் கம்யூனிகேசன் படிப்புக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. எந்த மாணவரைக் கேட்டாலும் இந்தப் படிப்பையே கூறிவந்தனர். அப்படிப் படித்து முடித்த மாணவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள்? நல்ல சம்பளத்தில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? இது போன்ற கேள்விகளை எழுப்பினால் வருத்தமே மிஞ்சும்.
பிரிவுகள் பல...
காரணம், ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஊடகம் தொடர்பான இதழியல், விஷுவல் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மீடியா, ஃபிலிம்