

வகுப்பறையில் ஆசிரியர் நுழைந்ததும் மாணவி ஒருவர், "சார் இந்த நீலி மட்டும் எங்க ட்ராமாவில் நடிக்கவே மாட்டாங்க சார்" "சரி நடிக்க வேணாம் அவளால என்ன பண்ண முடியுமோ பண்ணட்டும்" என்றார் ஆசிரியர்.
"சார் அவ தொந்தரவு பண்றா சார்" ஆசிரியர் முழு வகுப்பறையை நோக்கி. "எல்லா மாணவர்களும் கவனியுங்கள். நாம குழுவா சேர்ந்து வேலை செய்யறப்ப சில பேர் நமக்கு , நம்ம குழுவுக்கு நிறைய உதவி செய்வாங்க சில பேர் தேவைப்படுகிற உதவி மட்டும் செய்வாங்க, சில பேர் எதுவுமே செய்ய மாட்டாங்க.
நீங்க எல்லாரும் சொல்லுங்க இப்ப நாம யாரு மேல கவனம் செலுத்தனும்?" "வேலை செய்யாதவர்களை குழுவை விட்டு அனுப்பிருங்க சார்" என்றான் ஒரு மாணவன். "சார் அவங்கள அப்படியே விட்டுட்டு நாம நம்ம வேலையை பார்க்கலாம் சார்" என்றாள் இன்னொரு மாணவி.
"ஓ அழுகின்ற பாவனையில்.. சார் என்னோடு குழுவில் எல்லாருமே அப்படிதான் சார்.. இருக் காங்க. நான் என்ன சார் பண்ணுவேன்" இது இன்னொரு மாணவி. அனைவரும் சிரித்தனர்.
"நாம நாடகம் பண்ணும் போது மட்டும் இல்ல நம்ம வாழ்க்கையில எந்த ஒரு விஷயத்தை ஒரு குழுவா செய்யணும் நினைக்கிறோமோ அப்பல்லாம் நம்ம இதே மாதிரி ஒரு பிரச் சனையை எதிர்கொள்வோம். ஆனா அங்கல் லாம் ஒரு டீச்சர் இருக்க மாட்டாங்க உங்க பிரச்சனையை தீர்த்து வைக்கிறதுக்கு. அப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க. ஒழுங்கா வேலை செய்யாதவர்கள் மீது கவனம் செலுத்தி உங்க வேலைய பாழாக்க போறீங்களா...
இல்ல, ஒரு குழுவே வேலை செய்யாமல் இருப்பதற்கு.. நீங்க உங்களை முன்னிலைப் படுத்துகிறது தான் காரணமா இருக்கா. இதுல எல்லாத்தையும் கவனம் செலுத்தி உங்களுடைய தயாரிப்புல கவனம் செலுத்தாமல் விடப் போறீங்களா?" நீங்க என்ன செய்யப் போறீங்க?" ஒரு மாணவி கூறினார்.
"இது எல்லாத்திலு யும் கவனம் இருக்கணும், ஆனா நம்மளோட தயாரிப்பில் தான் முழு கவனம் இருக்கணும்.. ஏன்னா நம்ம குழுவான காரணமே அதற்காகத்தான்" எல்லா மாணவர்களும் ஆமா சார் என்றனர்.
சீக்கிரமா நாடகத்தை தயாரித்து முடிங்க. இன்னொரு சின்ன கருத்து நீங்க கவனத்துல கொள்ளணும். நீங்க தயாரிக்கிறப்ப எல்லா குழுவுலேயும் நிறைய சத்தம்வருது.... நீங்க உருவாக்குற நாடகத்தை மற்றவர்கள் யாரும் கேட்காத அளவுக்கு சத்தம் கம்மியா ரகசியமா பேசி தயார்பண்ணுங்க. மேடைக்கு வரும்போது சத்தமா பேசலாம்.
அதுக்காக ஒவ்வொரு குழுவுலயும் ஒருத்தர நியமிங்க அவங்க உங்க குழுவில் இருந்து சத்தம் வெளியே போகுதான்னு கவனிப்பாங்க. சரிதானே.. நாடகத்தை சீக்கிரம் தயார்பண்ணுங்க. நானும் நாடகத்தை பாக்கணும்ல"
கட்டுரையாளர், நாடகக் கலை மூலம் கல்வி பயிற்றுவிப்பவர்