

மாயா பளிங்குத் தரையில் படுத்த படியே அண்ணாந்து பார்க்கிறாள். அடுக்கடுக்காய் புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை ஆர்வத்தோடு படிக்கிறாள். “நூல் பல கல்” என்று ஆசிரியர் கூறியது ஒலித்துக் கொண்டே இருந்தது. வாசிப்பே சுவாசிப்பு என்று நினைத்துக் கொண்டாள்.மண் குடிசையில் வசித்த அவள் காலை உணவை உண்ட பிறகு அப்பாவுக்கு சாப்பாட்டை வயலுக்கு எடுத்துச் சென்றாள்.
அப்படியே அருகில் உள்ள ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருக்கும் போது ஏதோ மின்னியதைக் கண்டு அப்பாவை அழைத்தாள்.
அவரும், அட, இதுவரை என் கண்ணில்படலையே என்று தோண்டிப் பார்த்த போது கிடைத்த கடவுள் சிலையை அரசிடம் ஒப்படைத்தனர். அதிக விலை கொண்ட சிலையை ஒப்படைத்ததால் மாவட்ட ஆட்சியர் அழைத்து பெருமைப்படுத்தி, மேற்படிப்பு படிக்க உதவினார்.
தோழி மான்விழி மாயாவைப் பாராட்டினாள். பழக பழக நட்பு இன்பமானது. மாயாவுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்பாள். அப்படிப்பட்ட நட்பை கொண்டிருந்தாள். படிக்க படிக்க இன்பம் தருவது நூல் போல பழக பழக இன்பம் தருவது நட்பே . இருவரும் ஊன்றி படித்து முன்னேற மாயா கல்லூரி படிப்பை முடித்ததும் யூபிஎஸ்சி தேர்வெழுத முடிவெடுத்தாள்.
“உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் மாயா” என்று தோழி மான்விழியும் ஊக்கப்படுத்தினாள். கடின உழைப்பால் ஐஏஎஸ் ஆதிகாரி ஆகி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடன் தன் ஊருக்கு நூலகத்தை ஏற்பாடு செய்து அனைவரையும் வாசிப்பதற்கு ஊக்குவித்தாள். இதைத்தான் வள்ளுவர் நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு : குறள்783
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை