

ரஷ்ய நாட்டு சிறுகதைகளை வாசிக்கும் போதெல்லாம், ஒரு அழகான வண்ணம் கொண்ட குடை போன்ற வானும், நட்சத்திரங்கள் கீழே சிந்திக் கிடக்கும் தரையும், அங்கே குழந்தைகள் மின்னல்களாக மாறி கண்ணாமூச்சி விளையாடும் அழகும் என்பதாக கண் முன்னே காட்சி தோன்றுகிறது.
அடடா எத்தனை எத்தனை ருசிகரமான புத்தகங்கள். அந்த நாட்டில் பிறக்க முடியாமல் போனதில் ஏற்படும் வருத்தத்தை, நம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சரிசெய்து கொடுத்திருக்கிறார்கள். நா.முகமது செரிப் என்பவர் இந்த "அப்பா சிறுவனாக இருந்தபோது" ரஷ்ய மொழிப் புத்தகத்தை நமக்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தந்திருக்கிறார்.
அலெக்சாந்தர் ரஸ்கின் என்பவர் தன் மகள் காதுவலியால் துன்பப்படுவதை காணச் சகியாமல், மகளின் துன்பச் சிந்த னையை மடைமாற்ற கதை சொல்கிறார். கதை எதற்காகச் சொல்லுவோம்? கதைசொல்ல காரணம் எத்தனையோ சொல்லலாமே? மகள் காதுவலி எடுக்கும்போதெல் லாம் "அப்பா... அப்பா... நீங்கள் சிறுவனாக இருந்ததைப் பற்றி கதை சொல்லுங்கள்" என்பாளாம்.
வலி மறக்க கதை சொல்லும்போது கூடவே, பேராசையுடனோ, தற்புகழ்ச்சியு டனோ, தலைக்கனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்று மகளுக்கு புரியும்படியான கதைகளை கட்டமைத்துக் கூறுகிறார். ஆனால் எல்லா கதைகளும் எல்லா சிறுவர் வாழ்விலும் நடைபெற்ற ஒன்றுதான். எவை யுமே கற்பனை அல்ல என்கிறார் ரஸ்கின்.
பிங்-பாங் என்று ஒரு விளையாட்டு அவர் காலத்தில் இருந்துள்ளது. இந்த விளையாட்டை விளையாட பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்திருக்கிறார் அப்பா சிறுவனாக இருந்தபோது.
இதனால்ஒருவருடம் படிப்பை இழந்திருக்கிறார். அப்பா சிறுவனாகஇருந்தபோது நிறைய தவறுகளையும், நிறைய சொதப்பல்களையும் செய்து தாத்தா,பாட்டியை பாடுபடுத்தியிருக் கிறார். அப்பா சிறுவயதில் எழுத்தாளர் மயாகோவ்ஸ்கியிடம் பேசியது எப்படி? ஆசிரியையை அப்பா ஏமாற்றியது எப்படி?அப்பா இசை படித்தது எப்படி? அப்பா கவிதை எழுதியது எப்படி? என சிறுவயது நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே யிருக்கிறார்.
காதுவலி காணாமல் போகும்
படிக்கும்போது சிரிக்க வைக்கும் ஒரு கதை, அப்பா வரைந்தது எப்படி? பள்ளியில் ஓவிய வகுப்பில் அனைவரின் ஓவியத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது. சுமாராக இருக்கிறது. மோசம் என்று சொல்லிச் செல்லும் ஆசிரியர்... அப்பாவின் மேஜை அருகே வரும்போதெல்லாம் புளித்த எலுமிச்சைப் பழத்தை மெல்லுவது போல, முகம் கோணிச் செல்வார் என்று அப்பா சொல்லும்போது மகளின் காதுவலி நிச்சயம் காணாமல் போயிருக்கும்.
ஒருநாள் பெற்றோர் கூட்டம் நடக்கிறது. அப்போது ஓவிய ஆசிரியர் சிறுவனாக இருந்த அப்பாவின் பெயரைச் சொல்லி... இவன் போன்று மிக மோசமாக என்று எழுதக் கூட முடியாதளவு ஓவியத்தை யாருமே வரைய முடியாது என்கிறாராம். எதிர்காலத்தில் அப்பா, அவரை விட மோசமாக ஓவியம் வரையும் ஒருவரை சந்தித்த போது.. தன் ஓவிய ஆசிரியரை சந்தித்து பேச வேண்டும் என்று நினைக்கிறார்.
புலி வேட்டை
அப்பா சிறுவனாக இருந்தபோது மிகுந்த கோழையாக இருக்கிறார். சிறுமிகள் அவரை கிண்டல் செய்துகொண்டே இருக்கின்றனர். ஆசிரியர் ஒருநாள் ஏன் வகுப்பில் இருக்கும் அத்தனை பையன்களையும், விட்டுவிட்டு உன்னை மட்டும் கிண்டல் செய்கின்றனர் என்று கேட்கிறார். தான் அழுவதால்தான் என்ற காரணத்தை அறிந்த பின்னர்.. அப்பா வளர்ந்த பிறகும் அழுவதில்லையாம்.
அப்பா கோடைவிடுமுறையில் பொழுதைஎப்படிக் கழிப்பது என்று பையன்களுடன் கலந்தாலோசிக்கும் போது, புலி வேட்டைக்குச் செல்லலாம் என்று கூறுகிறார். கூட்டமாக பையன்கள் நானும்,நானும் என்று போட்டியிடும் போது, அங்கே எதிர்படும்பூனையை, புலியாக உருவகித்து கற்களையும் குச்சிகளையும் பூனைமீது வீசியெறிகிறார்கள். கல் ஒன்று பூனை மீதுபட்டு, பூனை இறந்து போகிறது. அன்றிலிருந்து அப்பா., எந்த உயிரினத்தையும் துன்புறுத்துவதில்லையாம்.
அப்பா சிறுவனாக இருந்தபோது செய்த, செய்யத்தவறிய செயல்களை மகள் சரியாக, முறையாக செய்து பழக வேண்டும் என்ற அப்பாவின் அக்கறையும், ஆர்வமும் "அப்பா சிறுவனாக இருந்தபோது" கதைகளின் வழி அறியலாம்.
ரஷ்ய நாட்டின் கதைப் புத்தகங்கள் எல்லாம், பொக்கிஷங்கள். "அப்பா சிறுவனாக இருந்தபோது" புத்த கம், குழந்தைகளுக்கான வாழ்க்கை ஒத்திகைகள் நிறைந்தது. வாழ்வின் உண்மைகளை ரசிக்கும்படியான கதைகளாக்கி யிருப்பது, ரஷ்ய இலக்கியத்தின் சிறப்பு.