டிங்குவிடம் கேளுங்கள்-1: பூரிக்குள் காற்று எப்படி வருகிறது, டிங்கு?

டிங்குவிடம் கேளுங்கள்-1: பூரிக்குள் காற்று எப்படி வருகிறது, டிங்கு?
Updated on
1 min read

- சி. தீபக், 4-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, திருச்செங்கோடு.

மாவைத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைத்திருக்கிறோம். அதனால் மாவில் நீர்ச்சத்து இருக்கிறது. தேய்த்த மாவை சூடான எண்ணெயில் போடும்போது, மாவில் இருக்கும் நீர்ச்சத்து வெப்பத்தால் விரிவடைந்து ஆவியாக வெளியேற முயற்சிசெய்யும். மேலே இருக்கும் மாவு அதைத் தடுக்கும். அதனால் சூடான காற்று, உப்பிய மாவுக்குள் தங்கிவிடுகிறது, தீபக்.

எனக்கும் என் தங்கைக்கும் நான்கு வயது வித்தியாசம். எதற்கெடுத்தாலும் நீ பெரியவன், விட்டுக்கொடுத்துப் போக வேண்டும் என்கிறார்கள். நான்மட்டுமே ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? அண்ணனுக்காக அவள் விட்டுத்தரக் கூடாதா, டிங்கு?

- பி. முகமது இர்ஃபான், 7-ம் வகுப்பு,அரசு மேல்நிலைப் பள்ளி, கீழக்கரை.

உங்கள் தங்கை பிறக்கும் வரை நீங்கள்தான் உங்கள் வீட்டுக்குச் செல்லப் பிள்ளையாக இருந்திருப்பீர்கள். பெற்றோரின் அன்பு முழுவதும் உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும். உங்கள்தங்கை பிறந்த பிறகு, நீங்களும்உங்கள் தங்கையும் பெற்றோரின் அன்பைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

அவருக்கு முழு அன்பு கிடைக்காது. உங்களைவிட நான்கு வயது சிறியவர்என்பதால், அவரைவிட உங்களுக்கு விஷயம் அதிகம் தெரியும். புரிதல் அதிகம் இருக்கும் இல்லையா? அப்படியென்றால் நீங்கள் தானே விட்டுக்கொடுக்க வேண்டும்? அதனால்தான் உங்கள் பெற்றோர், உங்களை விட்டுக்கொடுக்கச் சொல்கிறார்கள்.

தங்கைவளர்ந்த பிறகு உங்களுக்கு விட்டுக்கொடுப்பார். அப்போது இது எல்லாம் ஒரு விஷயமா என்று உங்களுக்கே தோன்றும், முகமது இர்ஃபான்.

நீங்களும் உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி :டிங்குவிடம் கேளுங்கள், வெற்றிக்கொடி, கஸ்தூரி மையம், 124, வாலஜா சாலை,

சென்னை - 600 002. மின்னஞ்சல்: vetrikodi@hindutamil.co.in2

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in