கதைக்குறள் - 1: காட்டுக்குள்ளே திருவிழா

கதைக்குறள் - 1: காட்டுக்குள்ளே திருவிழா
Updated on
1 min read

காட்டுக்குள்ளே திருவிழா நடைபெறுவதால் எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியோடு ஆரவாரமாக திரிந்தன. சிங்க ராஜா கர்ஜனையோடு தனது சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தார். முதலில் மான் துள்ளி துள்ளி வந்து ஒய்யாரமாய் fashion show நடத்திக் காட்டியது.

யானை அசைந்து அசைந்து வந்து சர்க்கஸில் வித்தைக் காட்டுவது போல் சைக்கிள் ஓட்டியது. கரடியும் சிறுத்தையும் குத்துச் சண்டை செய்தன. குரங்குவாழைப்பழத்தோடு வந்து தனது குட்டிக்கு ஊட்டி விட்டது. இந்த கோமாளி தனத்தைப் பார்த்து மற்ற விலங்குகள் கொள் என சிரித்தன.

மயில் தன் தோகையை விரித்து ஆடியது. அதைக் கண்ட மேகக் கூட்டத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. வானிலிருந்து எட்டி எட்டி பார்த்தது. இதைக் கண்ட சிங்க ராஜா நிகழ்வைவிரைவில் முடித்துவிடலாம் என்று அடுத்து நரியைஅழைத்தது. எப்பவும் போல நரி தந்திரத்தோடு, ”புலி அண்ணா உங்களுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கிறது சிங்க ராஜா” என்று ஆரம்பித்தது நரி.

தான் மட்டுமே காட்டுக்கு ராஜா என்றும் சிங்க ராஜா சொல்வதை யாரும் கேட்காதீர்கள் என்று புலி சொன்னதாக கூறியது. இதைக் கேட்ட சிங்க ராஜா கொதித்து போய் புலியை சிறையில் அடையுங்கள் என்றது. புலியும் பரிதாபமாக சிறைக்குள் முடங்கியது.

சிறிது நாட்களுக்கு பிறகு சிங்க ராஜா சிறையைப் பார்வையிட வந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்தது. இதைக் கண்ட புலி தன் தோளில் தூக்கிப் போட்டு மருத்துவமனைக்குச் சென்றது. கண்விழித்துப் பார்த்த சிங்க ராஜா தன்னைக் காப்பாற்றிய புலியைக் கட்டி அணைத்துக் கொண்டது.

இதைத் தான் வள்ளுவர்

"இன்னா செய்தாரை ஒறுத்தல்

அவர் நாண நன்னயம் செய்து விடல்"

என்றார்.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in