Published : 21 Jan 2020 11:10 AM
Last Updated : 21 Jan 2020 11:10 AM

Content Aware Scale தெரியுமா?

வெங்கி

போட்டோஷாப் மெனுவில் தொகுப்பு ( Edit ) பற்றி பார்ப்போம். இந்தப் பகுதியிலும் பல முக்கியமான அம்சங்கள் உள்ளன. வேலைகளை படிப் படியாக செய்யும்போது ஏற்படும் தவறுகளை உடனடியாக சரிசெய்ய Undo என்று ஒரு படி பின்னால் வர Shift Ctrl Z என்று கீ போர்டில் அழுத்தினால் போதும். மேலும் பல படிகள் பின்னால் செல்ல வேண்டுமென்றால் Alt Ctrl Z என்று அழுத்த வேண்டும்.

இதில் 20 படிகள் மட்டுமே பின்னால் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். அதை 500 அல்லது 1000 படிகள் கூட பின்னால் செல்லுமாறு அமைத்துக்கொள்ளலாம். அதற்கு எடிட்டில் Preferences க்குச் சென்று அதில் Performance க்குச் செல்ல வேண்டும். அதில் History Status என்று இருக்கும். அதில் தேவையான படி எண்களை டைப் செய்துகொள்ளலாம். அல்லது அதன் கீழே காணப்படும் பாரில் வலதுபக்கம் மவுஸை நகர்த்தினால் படிகளின் எண்ணிக்கை தேவையான அளவுக்கு அதிகரிக்கும்.

அதென்ன பேஸ்ட் ஸ்பெஷல்?

ஏதாவதொன்றை Copy செய்து, அதை ஒட்டுவதான் Paste என்பது உங்களுக்குத் தெரியும். Paste Special என்று உள்ளதே, அது என்ன? Paste in place என்றால் படத்தின் ஒரு பகுதியை காப்பி செய்து அதே இடத்தில் பேஸ்ட் செய்வதாகும். Paste into என்றால் ஒரு படத்தை காப்பி செய்துகொண்டு அதை செலக்ட் செய்து வைத்திருக்கும் குறிப்பிட்ட இடத்தில் பேஸ்ட் செய்வதாகும்.

அப்படி பேஸ்ட் செய்யப்பட்ட இமேஜை Transform டூலை வைத்து தேவையான சைசுக்கு படத்தை பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதுவே Paste into என்பதாகும். அடுத்ததாக Clear என்பது ஒரு லேயரில் உள்ள இமேஜை க்ளியர் செய்வதாகும். கிட்டத்தட்ட ‘டெலிட்’ செய்வது போலாகும். அடுத்து, Check spelling என்பதும் Find and Replace text என்பதும் நாம் தட்டச்சு செய்யும் எழுத்துக்களைக் கையாளப் பயன்படும் அம்சங்களாகும்.

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது, Content Aware Scale என்பதாகும் ( Alt Shift Ctrl C ) . போட்டோஷாப் டூல்களில் ’ஸ்டாம்ப் டூல் என்று ஒன்று உள்ளது. அதைப் போன்ற ஒரு அம்சமாகும். அதாவது, ஒரு இமேஜில் தேவையில்லாத பொருளை நீக்க இது உதவும். உதாரணத்துக்கு கடற்கரையில் மூன்று குழந்தைகள் விளையாடும் காட்சியில் ஒரு குழந்தையின் உருவத்தை மறையச் செய்யலாம்.

இதை நாம் மேலே குறிப்பிட்ட ஸ்டாம்ப் டூலைக் கொண்டு அதே இமேஜின் வேறு ஒரு பகுதியைக் கொண்டுவந்து, குறிப்பிட்ட தேவையில்லாத இமேஜை மறையச் செய்யலாம். அந்த வேலையை ஸ்டாம்ப் டூலைப் பயன்படுத்தாமல் வேறு வழியில் சென்று செய்யப் பயன்படும் அம்சமே Content Aware Scale என்பதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x