

மேம்பட்ட ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களில் ஒன்று ‘ஃபோட்டோஷாப் ஸ்கிரிப்ட்’ என்பதாகும். இதற்கு தேவை ஜாவாஸ்கிரிப்ட் பற்றிய அடிப்படை அறிவு.
ஸ்க்ரிப்ட்டை அறிந்துகொள்வது கடினமல்ல. முதலில் புரியாத புதிர் போல தோன்றினாலும் புரிந்துகொண்டால் எளிதாக இதை கையாள முடியும்.
முன்பு சொன்னது போல ஃபோட்டோஷாப்பில் நமது செயல்களை படிப்படியாக பதிவு செய்யும் ஒரு முறை உள்ளது. அதற்கு Action என்று பெயர். அதில் நாம் அடுத்தடுத்து செய்யும் செயல்களை வரிசைப்படி பதிவு செய்து வைத்து, அதே போன்ற வேறொரு வேலையை செய்யும்போது, முன்னர் பதிவு செய்ததை ப்ளே செய்தால் வேலை எளிதாகும். அதில் பதிவு செய்யும்போது, ஒரு குறிப்பிட்ட முடிவை அடைவதற்கான படிகளின் வரிசையை முறையாக அமைக்கவேண்டும். அது போலவே ஃபோட்டோஷாப்பில் நிரல்களாக, குறியீடாக, வரிகளில் எழுதுவதற்குப் பெயர்தான் Script ஆகும்.
File Info... (Alt Shift Ctrl I)
இது ஒரு படத்தின் தன்மைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு உதவக்கூடியதாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட படத்தை நாம் நமக்குத் தேவையான தன்மையில் மாற்றி அமைத்துக்கொள்வதற்கும் இது வழிகோலுகிறது.
Print (Ctrl P)
இது நமக்குத் தேவையான ஒரு படத்தையோ அல்லது பல படங்களையோ பேப்பரில் அச்சடித்துக் கொள்ள உதவும். இதற்கு கணினி, போட்டோஷாப் இருந்தால் மட்டும் போதாது. சிறந்த ப்ரின்ட்டர்களும் தேவை. இப்போது குறைந்த விலையில் சிறந்த ப்ரிண்ட்டர்கள் நிறையக் கிடைக்கின்றன. கருப்பு வெள்ளை ப்ரின்ட்டர் தேவையா அல்லது வண்ண ப்ரின்ட்டர்கள் தேவையா என்பதை முடிவு செய்து வாங்க வேண்டும். பிறகு அந்த ப்ரின்ட்டர் கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தால் போதும்.
Exit (Ctrl Q)
இது நமது வேலைகளை முடித்த பின், கணினியிலிருந்து போட்டோஷாப்பை மூடிவிட்டு வெளியேற உதவும்.