Last Updated : 09 Dec, 2019 11:24 AM

 

Published : 09 Dec 2019 11:24 AM
Last Updated : 09 Dec 2019 11:24 AM

ஒலிம்பிக் 5- கண்காட்சியாக மாறிய விளையாட்டுப் போட்டி!

கடும் போட்டிக்கு இடையே 1904 ஒலிம்பிக்ஸூக்கு செயின்ட் லூயி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாமே?

ஆம். ஒலிம்பிக்ஸ் தங்கள் நாட்டில் செயின்ட் லூயி நகரில்தான் நடக்க வேண்டுமென்று அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அடம் பிடித்துக் காரியத்தை சாதித்து கொண்டார். ஒரே செலவில் இரண்டு மாங்காய்களை அடிக்க அவருக்கு ஆசை. அந்த ஆண்டில்தான் லூசியானா கண்காட்சி அதே நகரத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகில் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அங்கு வந்து அமெரிக்கத் தயாரிப்புகளை அள்ளிச் செல்ல வேண்டுமென்பது அவரது விருப்பம். அதற்கு ஒலிம்பிக்ஸும் உதவுமே!

ஆனால், இதனால் ஒலிம்பிக்ஸ் வீழ்ச்சியையே சந்தித்தது. கண்காட்சிக்கு பலமான விளம்பரம் கிடைக்க, அதற்கு வந்தவர்களில் மிகச் சிலரே ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுகளித்தனர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள், “கண்காட்சிக்குள் கொஞ்சம் விளையாட்டும் நடந்தது” என்றே ஒலிம்பிக்ஸை வர்ணித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மிகக் குறைவாகவே பங்கேற்றன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகள் இந்த ஒலிம்பிக்ஸை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவை ஒட்டுமொத்தமாக இதில் கலந்துகொள்ளவில்லை.

ஒலிம்பிக்ஸ் சரித்திரத்தில் ஜார்ஜ் போவேஜ் என்பவரின் பெயர் எதனால் இடம்பெற்றது?

ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொண்ட முதல் கறுப்பினத்தவர் இவரே. 1904-ம்ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டில் 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x