

அருண் சரண்யா
நியாயத்துக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக பண்டைய ஒலிம்பிக்கைக் கூறலாமா?
முடியாது. ரதப் போட்டிகள் நடைபெற்றபோது கூட பரிசுகளை வெற்றி பெற்ற ரதங்களின் சொந்தக்காரர்களுக்கு வழங்கினார்களே தவிர அந்த ரதங்களை ஓட்டியவர்களுக்கு அல்ல.
1896-ல் நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கப்படபோது என்ன விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன?
அப்போது பாரிஸ் நகரவாசிகளுக்கு மிகவும் வருத்தம். அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் முதல் நவீன ஒலிம்பிக்ஸ் கிரேக்க நாட்டுத் தலைநகரான ஏதென்ஸில்தான் நடைபெற்றது. ஆனால், ஒரு பெரிய மைதானத்தை உருவாக்க கிரீஸ் அரசிடம் பணம் இல்லை. அப்போதுஜார்ஜியோஸ் அவேராஃப் (GeorgiosAverof) என்பவர் ஒரு லட்சம் டாலருக்கு மேல் நன்கொடையாக அளிக்க, வெள்ளை சலவைக் கற்கள் பதிக்க மைதானம் (இதன் பெயர் Panathenaic Stadium) ஒன்று எழுப்பப்பட்டது. கி.மு 330விலேயே இதே இடத்தில் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்ஸ் மீண்டும் மலர்ந்ததும் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தனவா?
அந்த ஒலிம்பிக்ஸின் போது உலகம் முழுவதும் பெரிதாக விளம்பரம் செய்யப்படவில்லை. எனவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த பணத்தைசெலவழித்துக்கொண்டு வந்தார்கள்என்பதே அப்போதைய நிலை. சொல்லப்போனால் அந்த பகுதிக்குச் சுற்றுலா வந்திருந்த சில விளையாட்டு வீரர்கள் கூட தற்செயலாக ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்
டார்கள்!
முதல் நவீன ஒலிம்பிக்ஸில் இடம்பெற்ற விளையாட்டுகள் எவை?
ஓட்டப் பந்தயங்கள், ஷாட்புட், போல்வால்ட், எடை தூக்குதல், நீச்சல்,சைக்கிள் ஒட்டுதல், குறிபார்த்து சுடுதல், டென்னிஸ், மரத்தான், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகள் மட்டுமே இடம் பெற்றன. நீச்சல்போட்டிகள் ஏஜியன் கடலில் (AegeanSea) உள்ள ஜியா விரி குடாவில் (Bayof Zea) நடைபெற்றன. இந்த ஒலிம்பிக்ஸில் அமெரிக்க தடகள வீரர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
என்ன அதிர்ச்சி?
போட்டிகளை தொடங்குவதற்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்பேஏதென்ஸுக்குச் சென்று பயிற்சிபெறவேண்டுமென்று முடிவெடுத்தனர் அமெரிக்க தடகள வீரர்கள். ஆனால்,அவர்கள் ஏதென்ஸுக்குச் சென்றஅடுத்த நாளே போட்டிகள் தொடங்கிவிட்டன. வேறொன்றுமில்லை. கிரேக்க நாட்காட்டிக்கும், அமெரிக்க நாட்காட்டிக்குமிடையே உள்ள வித்தியாசத்தை அவர்கள் கவனிக்க தவறி விட்டனர்!
(தொடரும்)