

மாணவர்களிடையே சமத்து வத்தையும், சமூக நீதியையும் கற்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அறிவுப்பூர்வமான கருத்துகளை மட்டுமே போதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளக்கும் நுண்ணறிவாகும். காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏற்படுத்தவும் வேண்டும்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. - குறள், 355
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள், 423
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், ஒரு பொருள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதன் உண்மையைக் காண்பதுதான் அறிவு என்று உலகம் போற்றும் பொதுமறையை அளித்த திருவள்ளுவரே ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். எனவே, கட்டுக்கதைகளை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன்.
- ப.கீர்த்திமாலினி, 10ஆம் வகுப்பு, அ.ம.மே.நி.பள்ளி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை.
சிறப்பான பதிவு எழுதிய மாணவி கீர்த்திமாலினிக்கு பாராட்டுகள்.
மாணவர்கள் விடுமுறை நாட் களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என்று பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி இருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்தை 100 சொற்களுக்கு மிகாமல் எழுதி vetrikodi@hindutamil.co.in மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி விவரம், அலைபேசி எண், ஒளிப்படத்துடன் அனுப்புங்கள் மாணவர்களே. சிறந்த கட்டுரை பிரசுரிக்கப்படும்.