

காற்றில் பறந்து வந்த பந்தை குழந்தை மீது படாமல் நேர்த்தியாக பிடித்து தூக்கிப் போட்டார் வீரராகவன். அந்த பெற்றோருக்கோ மிகவும் மகிழ்ச்சி. யாரோ எவரோ எங்க குழந்தையை காப்பற்றியதற்கு நன்றி என்று சொன்னார்கள். ஐயா தங்களைப் பார்த்தால் பெரிய படிப்பாளி போல் உள்ளதே, எங்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்டனர்.
ஆமாம் அம்மா ஊர் ஊராக சென்று இலவசமாக ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன். இன்று உங்கள் ஊருக்கு வந்துள்ளேன். ஐயா நீங்கள் எங்க வீட்டிலேயே தங்கி சொல்லிக் கொடுக்கவும். இது எங்கள் அன்பு கட்டளை என்றார்கள். வீரராகவனும் ஏற்றுக் கொண்டு கல்வியைத் கற்றுக் கொடுத்தார்.
இதை அறிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவருக்கு விருது வழங்கி சிறப்பிக்க அவரைத் தேடி வந்து வரவேற்றனர். இவற்றைஎல்லாம் விரும்பாத வீரராகவன் மறுத்தார். இருப்பினும் வற்புறுத்தி அவர் வருகையை உறுதிப்படுத்தி விட்டுச் சென்றனர்.
வீரராகவன் விழாவிற்கு புறப்பட்டார். வழியில் யானை ஒன்று பாகனை விரட்டிக் கொண்டு வந்து மிதித்தது. இதைக் கண்டு அருகில் செல்ல அச்சமுற்றாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தறுகண் யானை தான் பெரிதாயினும் சிறு கண் மூங்கிற்கோலுக்கஞ்சுமே என்ற பாடல் நினைவுக்கு வர மூங்கிற் கோலை எடுத்து விரட்டி பாகனைக் காப்பாற்றினார்.
விழாவிற்கு தாமதம் ஆகிவிட்டது. எல்லோரும் காத்திருந்தனர். புலவர் வழியில் நடைபெற்ற நிகழ்வை எடுத்துக் கூறி மன்னிப்புக் கேட்டார். நீங்கள் செய்த செயல் இந்த விருதுக்கு மேலும் மெருகூட்டுவது போல் இருக்கிறது.
உங்களைப் போன்று படித்தோர் புகழுக்கு ஆசைப்படும் நேரத்தில், நீங்கள் விருதுக்கு ஆசைப்படாமல் மனித நேயத்துக்கு முக்கியத் துவம் கொடுப்பதைத் தான் வள்ளுவர் எவ்வளவு தான் அறிவு நிறைந்த சான்றோராக இருந்தாலும் மனித நேயத்தோடு இருக்க வேண்டும் என்பதை
அரம் போலும் கூர்மைய ரேனும்
மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். - குறள்; 997
என்று கூறுகிறது.
அதிகாரம் 100
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்