வேலைக்கு நான் தயார் - 32: தரமான கல்லூரிகளை அறிவது எப்படி?

வேலைக்கு நான் தயார் - 32: தரமான கல்லூரிகளை அறிவது எப்படி?
Updated on
1 min read

எனது மகன் பிளஸ் 2 படிக்கிறான். அவனை தரமான உயர்கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க ஆசைப்படுகிறேன். ரேங்கிங் முறை பற்றி தெரிவிக்கவும். - சங்கர நாராயணன், பாளையங்கோட்டை.

உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளை தர வரிசைப்படுத்தும் முறை பல நாடுகளில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் தர வரிசை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய கல்வி அமைச்சகம் என்.ஐ.ஆர்.எப். (நேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ் ரேங்கிங் பிரேம் ஒர்க்) என்ற பெயரில் 2015-ல் அறிமுகம் செய்தது. அதன்படி ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது.

ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் மற்றும் பிரிவு வாரியாக அதாவது பொறியியல், மருத்துவம், கலை- அறிவியல், பார்மசி போன்ற பிரிவுகளுக்காகவும் தனித்தனியே வெளியிடுகின்றது.

இதன் மூலம் ஆண்டுதோறும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவினை வழங்கும் கல்வி நிறுவனங்களின் தர நிர்ணயத்தினை அறிந்து கொள்ளலாம். அதே போன்று வெளிநாடுகளில் உள்ளபல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தர வரிசையினை அறிந்து கொள்ள உதவும் உலகளவில் புகழ் பெற்ற ஒருசில தர வரிசைகள் பின்வருமாறு.

1. QS. Ranking: இது 1400 க்கும் மேற்பட்ட உலகளவிலான கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்ந்து தர வரிசைப் பட்டியலை வெளியிடுகின்றது.

2. Times World University Ranking: இந்த நிறுவனம் 104 நாடுகளில் உள்ள 1800 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தர வரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

3. Best Global University Rankings: 57 நாடுகளைச் சேர்ந்த 750 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து பட்டியலை வெளியிடுகிறது.

4. Round University Rankings : உலகம்ழுமுவதும் உள்ள 1200 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இங்கு தர வரிசைப் பட்டியலிடப்பட்டுள்ளது.

5. Shangai Ranking: 2500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இதன் மூலம் தர வரிசை பட்டியலிடப்படுகிறது. இப்பட்டியல்களின் மூலம் நாம் பயிலப் போகும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களை அறிந்து அதற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in