பூ பூக்கும் ஓசை - 30 சுற்றுச்சூழல் நீதி எது?

பூ பூக்கும் ஓசை - 30 சுற்றுச்சூழல் நீதி எது?

Published on

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பஞ்சத்தின் காரணமாக விவசாய உற்பத்தி குறைந்து உணவு தானியங்களின் விலை மாதம் ஒருமுறை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவின் தேசிய வறுமை விகிதம் 2040இல் 3.5% அதிகரித்திருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்விளைவாக ஆண்டுக்கு 5 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவது நம் கண்களுக்குத் தெரியாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றம் கடலையொட்டி வாழும் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் பாதித்துள்ளது. கடலோர கிராமப் பெண்கள் நீண்ட நேரம் கடலில் நின்று மீன், நண்டு, சிப்பிகளைச் சேகரிக்கின்றனர். ஆனால், தற்போது உயர்ந்து வரும் கடலின் உப்பு அளவு அவர்களுக்கு உடல்நல உபாதைகளை ஏற்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட் போன்ற பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளிலேயே அதிக அளவு சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி நடைபெறும் பகுதிகளைச் சுற்றி வாழும் மக்களின் வாழ்வாதாரமும், ஆரோக்கியமும் சீரழிகிறது. சுரங்கப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் நீர்நிலைகள் மண் தூசுக்களால் மாசுபடுகின்றன. சுவாசிக்கும் காற்றும் அதிகளவு மாசுபாடு காரணமாக பழங்குடி மக்களுக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை உண்டாக்குகிறது.

இத்தகைய சீரழிவுகள் வருமானம் அதிகமுள்ள, இடைநிலை, மேட்டுக்குடி மக்களை அதிகம் பாதிப்பதில்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் அரசு ஒவ்வொரு சமூக மக்கள் சந்திக்கும் இன்னல்களையும் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக இருக்கிறது. இதுவே சுற்றுச்சூழல் நீதியாகும்.

(நிறைவுற்றது)

- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘சிதிலங்களின் தேசம்’, ‘உயிர்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in