

தென் கிழக்கு இந்தியா – இலங்கை இடையே, வங்காள விரிகுடாவின் நுழைவாயிலாக உள்ளது பாக் ஜலசந்தி. 130 கி.மீ. நீளம் கொண்ட பாக் ஜலசந்தியின் ஆழம் 100 மீட்டருக்கும் குறைவு. 10,500 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ‘பயோ ரிசர்வ்’ இங்குள்ள முக்கிய சுற்றுச்சூழல் பகுதியாகும்.
நூற்றுக்கும் மேற்பட்ட பவளப் பாறைகள், 3000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், கடல் ஆமைகள், சுறாக்கள், டால்பின்கள், திமிங்கலங்கள் என்று வளம் மிகுந்து காணப்படும் இந்தப் பகுதியில் மிகப் பிரபலமானது முத்துக் குளியல்.
உலகில் மிக அதிகளவில் முத்துக்கள் கிடைக்கும் இடமான மன்னார் வளைகுடா – பாக் ஜலசந்தி பகுதி – இயற்கை நமக்குத் தந்த வெகுமதி. கடலில் மூழ்கி முத்து எடுக்கும் தொழில் இங்கு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இலங்கையின் வர்த்தக மையமான யாழ்ப்பாணம் ஜலசந்தியில் உள்ளது. இதே போன்று, தென் இந்தியாவின் மிக முக்கிய துறைமுகமான தூத்துக்குடி, இப்பகுதிக்கும் தமிழகத்துக்கும் சிறப்பு சேர்க்கிறது.
நமது மாநிலத்தில் நமக்கு அருகில் உள்ள மன்னார் வளைகுடா, குடும்பத்தோடும், நண்பர்களுடனும் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகும். ஒருமுறையேனும் நேரில் சென்றுதான் பார்ப்போமே.
இத்துடன் ‘நீர்நிலை’ நிறைவுறுகிறது.
அடுத்து… ‘உலகம்’ என்பது என்ன..? ‘மண்ணும் மக்களும்’.
அபாரம். சிறப்பான பதில். ஆனால் இதனை இன்னும் சற்று விரிவுபடுத்தலாம்.
ஏன் ‘மக்கள்’ என்று நிறுத்திக் கொள்ள வேண்டும்..? ’உலகமும் உயிர்களும்’ என்றால் இன்னும் பொருள் உள்ளதாக இருக்கும் அல்லவா!
‘ஆமாம் சார்… இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானதுதானே..?’
மகிழ்ச்சி. மிக நன்றாகப் புரிந்து வைத்து இருக்கிறீர்கள். அப்படியானால், நாம் ஏன் இனி, ‘உயிர்கள்’ குறித்து ’பார்க்க’ கூடாது..?
ஆமாம் சார்…. ‘உயிர்கள்’ பற்றி தெரிஞ்சுக்க ஆசையா இருக்கோம்.
நல்லது. புதிய கல்வியாண்டில் உலக உயிர்கள் பற்றிப் பார்ப்போம்
மன்னார் வளைகுடாவை நம்பி இருக்கும் தொழில்கள் யாவை?
(நதிகள் முற்றும்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com