

பாட்டி: Would ஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.
இனியன்: அது super ஆ புரிஞ்சது. ஆனால்...
பாட்டி: பரவாயில்லை சொல்லுங்க. உங்க doubt ஐ clear செய்வது தான் என்னுடைய முக்கிய வேலை.
இனியன்: கற்பனையோடு தொடர்புபடுத்தி conditional statement வரும்னு சொன்னீங்களே.... அதை புரிஞ்சுக்க எனக்கு ரொம்ப சிரமமாக இருக்குது.
பாட்டி: கற்பனை என்றால் என்ன? அதை முதலில் சொல்லு.
இசை: இல்லாத ஒன்றை இருப்பதுபோல் நினைப்பது என்று சொல்லலாமா.
பாட்டி: ஆமாம். அந்த இல்லாத ஒன்று, இருந்தால் நீ என்ன செய்வாய்?
உமையாள்: அது இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்வேன்.
பாட்டி: உன்கிட்ட passport இருக்குதா?
இனியன்: Passport என்றால்?
மித்ரன்: ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு வேலை சம்பந்தமாகவோ அல்லது சுற்றி பார்க்கவோ சொல்ல வேண்டுமென்றால் passport தேவை.
இனியன்: உனக்கு எப்படி தெரியும்?
மித்ரன்: எங்க மாமா லண்டன்ல இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன். என்கிட்டே passport இல்லை பாட்டி.
பாட்டி: உங்க மாமாவுடன், உங்க தாத்தா பாட்டி next week லண்டன்க்கு போறாங்கதானே.
மித்ரன்: ஆமாம் பாட்டி. அவங்க கிட்ட passport இருக்குது. அதனால அவங்களால லண்டனுக்கு மாமா கூட போக முடியுது
இனியன்: உன்கிட்ட இருந்தால், நீயும் அவங்க கூட லண்டனுக்கு போகலாம்.
மித்ரன்: ஆமாம். இப்போது அந்த வாய்ப்பு இல்லை. Ticket எல்லாம் போட்டாச்சு.
பாட்டி: இப்போ இனியன் சொன்னதுதான் second conditional statement.
மித்ரன்: “என்னிடம் passport இருந்தால், நான் லண்டனுக்கு போவேன்” என்று சொன்னானே. அதுவா?
பாட்டி: அதேதான். இல்லாத ஒன்றை கற்பனையுடன் சேர்த்து ஒரு வாக்கியம் அமைத்தான் அல்லவா?
மித்ரன்: ஆமாம்.
பாட்டி: அந்த கற்பனையும் உண்மையாக நடக்க வாய்ப்பு இருக்கிறது.
இசை: இது நிகழ் காலத்தில் நடக்கிற கற்பனை.
பாட்டி: ஆமாம். ஆனால் உடனடியாக நடக்க வாய்ப்பு இல்லை. சரியா?
இனியன்: சரி.
பாட்டி: ஆனால், இது நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதை ஒத்துக்கொள்கிறீர்களா?
உமையாள்: ஆமாம்.
பாட்டி: இதைதான் second conditional statement என்று சொல்கிறோம்.
இசை: புரியுது பாட்டி.
பாட்டி: Second conditional statement ற்கு ஆங்கிலத்தில் சில விதிமுறைகள் இருக்கிறது.
பாட்டி: Conditional clause இல் verb ஆனது simple past tense இல் இருக்க வேண்டும்.
பாட்டி: Main clause இல் present verbற்கு முன்னால் wouldஐ சேர்க்க வேண்டும்.
Second Conditional StatementIf I had a parrot, I would teach it to say “Good morning”.என்னிடம் கிளி இருந்தால் “குட் மார்னிங்” என்று சொல் லக் கற்றுக் கொடுப்பேன்.If I got a magic lamp, I would ask for a giant chocolate cake.எனக்கு ஒரு மந்திர விளக்கு கிடைத்தால், நான் ஒரு பெரிய சாக்லேட் கேக்கைக் கேட்பேன்.If I were a superhero, I would save people from danger.நான் ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தால், மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவேன்.
- தொடரும்
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்.