

ஆகாஷ் அப்பாவுடன் கடற்கரைக்குச் சென்றான். அப்பா மேகம் ஏன் ஓடு கிறது? சூரியன் ஏன் இரவில் வரவில்லை? நிலவு ஏன் பகலில் மறைந்து விடுகிறது. இப்படி பல கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தான். அதற்கு "மேகம் மழையா கொட்டும்.சூரியன் சுற்றுவதால் இரவு, பகல் உண்டாகிறது. நிலவில் சூரிய ஒளிபடும் போது வெளிச்சம் கிடைக்கிறது. வெளிச்சம் இல்லாத போதுபகலில் தெரிவதில்லை” என்று பதில் அளித்தார்.
இயற்கையை நாம் போற்ற வேண்டும். நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய சக்தி இவை இல்லாவிடில் நாம் வாழ முடியாது. இதைக் கேட்டதும் ஆகாஷ்க்கு தானும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து மரம் வளர்த்து ஆக்ஸிஜன் தயாரிக்க எண்ணினான். மரங்களை வளர்த்தால்வீடு கட்ட யாராவது வந்து வெட்டி விடுகிறார்கள்.
அதனால் மரத்தில், மரம் இல்லையேல் மூச்சு இல்லை என்ற வாசகத்தை எழுதி கட்டித் தொங்க விட்டான். அதைப் பார்த்து விட்டு சிலர் மரத்தை வெட்டாமல் சென்றனர். மரம் வளர்ப்பதே சவாலாக இருந்தது. எல்லா வற்றையும் மீறி மரம் வளர்த்து ஆக்ஸிஜன் தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தான்.
எதிர்பாராத விதமாக அவன் ஊரில் மர்ம காய்ச்சல் வந்தது. ஒரு பச்சை குழந்தைக்கு மூச்சுவிட முடியவில்லை. அவர்கள் ஆகாஷைநாடினர். தம்பி எப்படியாவது காப்பாற்று பா என்றார்கள். இலவசமாக ஆக்ஸிஜன் கொடுத்து உதவினான். இப்படி ஒவ்வொருவராக வந்து உதவியை நாடினார்கள்.
ஆபத்தான நிலையில் இருந்த எல்லோருக்கும் இலவசமாக ஆக்ஸிஜன் கொடுத்து உதவினான். உயிர் பிழைத்த மக்கள் அவனை கண் கண்ட தெய்வமாக வணங்கினர். நாம் எந்த வகையிலாவது மற்றவர்க்கு உதவ வேண்டும். அந்த உதவி பெற்றுக் கொண்டவரின் பண்பை பொறுத்து அமையும்.
இதைத் தான் வள்ளுவர்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து
குறள்:105
அதிகாரம்: செய் நன்றியறிதல்
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்