கொஞ்சம் Technique கொஞ்சம் English - 290: Third conditional statement - தொடர்கிறது

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 290: Third conditional statement - தொடர்கிறது
Updated on
1 min read

இசை: Second conditional statement இல் conditional clause ஆனது past tense இல் வர வேண்டும் என்று சொன்னீங்க.

உமையாள்: அது போல் third conditional statement ற்கு rule எதுவும் இருக்குதா பாட்டி

பாட்டி: இங்கேயும் உண்டு.

மித்ரன்: அது என்னன்னு சொல்லுங்க பாட்டி.

பாட்டி: இங்கு Conditional clause ஆனது past perfect tense ஆக இருக்க வேண்டும்.

இனியன்: அப்படியென்றால் main clause எப்படி இருக்கும்?

பாட்டி: Main clause ஆனது future perfect tense இல் இருக்க வேண்டும்.

மித்ரன்: கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன்.

பாட்டி: நேற்று இனியன் சொன்ன sentence ஐ யாரவது சொல்லுங்க.

இசை: “அக்கா சொல்வதை நான் கேட்டிருந்தால், திட்டு வாங்கியிருக்க மாட்டேன்” என்று இனியன் சொன்னான்.

பாட்டி: இங்கு “யிரு” என்கிற வார்த்தை இரண்டு clause யிலும் வருவதை கவனித்தீர்களா?

மித்ரன்: நாம் ஆரம்பத்தில் perfect tense இல் படித்த “யிரு” தான் இங்கும் வருகிறது.

உமையாள்: “யிரு” என்ற வார்த்தை வந்தாலே, perfect tense இல் எழுத வேண்டும் என்பது rule.

பாட்டி: மிகவும் சரி.

- (தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in