

இனியன்: பாட்டி, இன்னைக்கு geometry box ஐ school க்கு எடுத்துட்டு போக மறந்துட்டேன்.
இசை: காலையில் நான் கூட ஞாபகப்படுத்தினேனே!
இனியன்: ஆமாம். அப்புறம் மறந்துட்டேன். என்ன மாதிரியே நிறைய பேர் எடுத்துட்டு வரல.
இசை: திட்டு விழுந்திருக்குமே!
இனியன்: அத்தனை தடவை ஞாபகப்படுத்தியும் இப்படி மறந்துட்டு வந்தா எப்படின்னு mam சத்தம் போட்டாங்க.
மித்ரன்: சத்தம் போட்டதும் அழுகை வந்ததா?
இனியன்: கொஞ்சம் அழுகையா வந்தது.
உமையாள்: அச்சச்சோ. அப்புறம்.
இனியன்: எனக்கு மட்டும் இறக்கைகள் இருந்தா, இப்போ போய் எடுத்துத்துட்டு வந்துருவேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
இசை: கற்பனை உலகத்துல இருந்துட்டு வந்திருக்கான் பாருங்க.
பாட்டி: அவன் கற்பனை உலகை பத்தி இங்கே சொன்னது ரொம்ப நல்லதா போச்சு.
மித்ரன்: எப்படி பாட்டி?
பாட்டி: இந்த கற்பனை உலகில் ஒரு conditional statement வருதா? இதுதான் second conditional statement
உமையாள்: ஆஹா! கற்பனையும் நல்லது தான்.
பாட்டி: இங்கு Past tense இல் conditional clause வரும்.
இசை: அப்போ main clause?
பாட்டி: Main clause ஆனது future past ஆக வரும்.
மித்ரன்: அது எப்படி இருக்கும்?
பாட்டி: Future tense ற்கு பயன்படுத்தும் will ஐ past tense இல் மாற்றி would என்று எழுதினால் போதும்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்