

கோபிகா மாமா கோழிப் பண்ணை வைத்து இருந்தார். கோபிகாவுக்கு கோழிக்குஞ்சு மிகவும் பிடிக்கும். அந்த பண்ணையில் அடிக்கடி கோழி காணாமல் போனது. யார் திருடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று வீட்டில் பேசிக் கொண்டு இருந்தார். அதைக் கேட்ட கோபிகாவுக்கு நாம் கண்டுபிடித்து தர வேண்டும் என்ற ஆசை வந்தது.
அன்று மாலை கோழிப் பண்ணையில் நீண்ட நேரம் செலவழித்தாள். அப்போது கோழி கத்தும் சத்தம் கேட்டது. மாமா வயலில் வேலை செய்யும் அன்பு தான் கோழியை சாக்கு பையில் போட்டுக் கொண்டு இருந்தான்.
அண்ணா இந்த திருட்டுத்தனம் நல்ல பழக்கமா? மாமாவிடம் உண்மையை சொல்லி விடுங்கள். இல்லையென்றால் நான் மாட்டி விடுவேன் என்றாள். நான் செய்தது தவறு தான். மாமாவிடம் உண்மையை சொல்லி விடுகிறேன் என்றான். அன்பு கோழியை பிடித்து திருட்டுத்தனமாக விற்று நல்ல பணம் சம்பாதித்து வந்தது அப்போது தான்தெரிந்தது. உண்ட வீட்டுக்கே தீங்கு செய்கிறாயா? என்று சத்தம் போட்டார். ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள். உங்க மகன் தான் என்னை கோழியைத் திருடி தரச் சொன்னார்.
இனிமேல் தப்பு செய்யமாட்டேன் என்றார். அதைக் கேட்டு அதிர்ந்து போய் அவனை அழைத்து கூட்டு திருட்டா செய்கிறீர்கள். தீய பழக்கம் உன்னைக் காட்டிக் கொடுத்தது? நல்லவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம் வரும். தீயவர்களோடு சேர்ந்தால் தீய பழக்கம் தான் வரும் என்று அறிவுரை சொன்னார். இருவரும் தலை குனிந்தனர். கோழிக்கு ஆபத்து இல்லை என்றதும் நிம்மதியாக வீட்டுக்குப் போனாள் கோபிகா.
இதை தான் வள்ளுவர்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். குறள்: 138
என்று ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் எடுத்தோம்பி உள்ளார்.
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்