

நான் பிளஸ் 2 படிக்கிறேன். மற்ற புரபெஷனல் கோர்ஸ்ஐ விட எனக்கு அட்வர்டைசிங் மிகவும் பிடித்துள்ளது. விளம்பர உலகில் சாதிக்க என்ன படிக்க வேண்டும்?- சாய் கணேஷ், மைலாப்பூர், சென்னை.
இந்திய விளம்பர துறை மிகவும் பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. நம் மக்கள்தொகை காரணமாகவும் உலகில் அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் விளம்பரமாகும் நாடு என்பதாலும் மிகப் பெரிய விளம்பரச் சந்தையைக் கொண்டுள்ளது. இதன் அளவு சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என 2022-ம் ஆண்டுக்கு கணிக்கப்பட்டுள்ளது.
விளம்பரத் துறை, பிரின்ட் மீடியா, சோசியல் மீடியா, விஷ்வல் மீடியா, டிஜிட்டல் மீடியா என பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் பல நிலைகளில் பணிபுரிய தகுதி வாய்ந்த திறன் பெற்றவர்கள் தேவைப்படுகின்றார்கள். இதற்கென நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பல்வேறு பட்டப் படிப்புகள், முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ. யில் சிறப்பு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக இளங்கலையில் பி.ஏ. டிஜிட்டல் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், பி.ஏ. மீடியா அண்ட் கம்யூனிகேஷன், பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன், பி.ஏ. கம்யூனிகேஷன், பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் அண்ட ஜர்னலிசம், பி.ஏ. அட்வர்டைசிங் அண்ட் சேல்ஸ் மேனேஜ்மெண்ட், பி.ஏ. அட்வர்டைசிங் அண்ட் மேனேஜ்மெண்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன.
உங்களின் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம். கல்லூரியினை இறுதி செய்யும்பட்சத்தில் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் வளாக வேலைவாய்ப்பு தகவல்கள் ஆகியவற்றை கூர்ந்து நோக்கவும்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.