கதைக் குறள் 55: எது உயர்ந்த குணம்?

கதைக் குறள் 55: எது உயர்ந்த குணம்?
Updated on
1 min read

சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட சிந்து சக்கரத்தில் காலை விட்டுவிட்டாள். அவளுடைய தோழி மதுமிதா ஓடிப் போய் அருகில் இருப்பவர்களிடம் உதவியை நாடி சக்கரத்தில் இருந்து காலை எடுத்து காப்பாற்றினாள். அவளுடைய பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று கட்டு போட்டு அழைத்து வந்தார்கள். மருத்துவர் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கச் சொன்னார். சிந்து சுற்றுலா செல்வதற்கு பெயர் கொடுத்து இருந்தாள். காலை அசைக்கக்கூடாது என்று சொன்னதால் சுற்றுலா செல்ல முடியாதே என்று வருத்தப்பட்டாள்.

தோழி மதுமிதாவை பார்க்க வந்தாள். எப்பவும் தேனீ போல் சுறுசுறுப்பாய் இருக்கும் சிந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கிறாளே என்று வருத்தப்பட்டாள் ஆறுதலும் சொல்லி விட்டு வீட்டிற்குச் சென்றாள். அவள் அம்மாவிடம் தான் சுற்றுலா செல்லவில்லை என்ற விவரத்தை சொன்னாள் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

போக வேண்டாம் என்று சொல்லும் போது அடம்பிடித்து சிந்துவோடு போவேன் என்றாள். இப்போது என்னவாகிவிட்டது என்று மதுமிதாவைக் கேட்டாள். சிந்துவுக்கு நேர்ந்ததை சொல்லி கண்ணீர்விட்டாள். இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த ஆண்டு போகலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டாள். தோழி மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தாள்.

பிறர் துன்பத்தை தனக்கு வந்த துன்பமாய் எண்ணியதைக் கண்டு வியந்தாள். சிந்துவுக்கு, மதுமிதா தனக்காக சுற்றுலா செல்லவில்லை என்பதைக் கேள்விப்பட்டு உள்ளம் பூரித்தாள். தோழியாக இருந்தாலும் காட்டிக் கொடுப்பவர்கள் மத்தியில் தன்னைப் போல் எண்ணும் உயர்ந்த குணத்தைக் கண்டு பாராட்டினாள். இதைத்தான் வள்ளுவர், பிறர் துன்பத்தைக் கண்டு தன் துன்பமாய் எண்ணி காப்பாற்றா தவன் அறிவினால் என்ன பயன் உண்டாகும் என்றார்.

அறிவினான் ஆகுவது உண்டோ
பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை

அதிகாரம்; இன்னாசெய்யாமை
குறள்; 315

- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in