

இசை: எல்லாரும் சேர்ந்து weekend எங்கேயாவது போய்ட்டு வரலாமா?
இனியன்: நானும் அதேதான் கேட்கணும்னு நினைச்சேன்.
உமையாள்: போகிற இடம் கொஞ்சம் பயனுள்ள இடமா இருந்தா நல்லா இருக்கும்.
மித்ரன்: கொஞ்சம் இல்லை, ரொம்பவே பயனுள்ள இடம் ஒன்னு இருக்குது.
உமையாள்: அது என்ன இடம்?
மித்ரன்: நம்ம எல்லாருக்குமே பிடிச்ச இடம் தான். சேர்ந்து போனால் இன்னும் நல்லா இருக்கும்.
இனியன்: suspense வைக்காத டா. சீக்கிரம் சொல்லு.
மித்ரன்: Book fair.
மித்ரன்: ஐ ஜாலி. பாட்டி கூட்டிட்டு போறாங்க ன்னு சொன்னால், எங்க வீட்ல சந்தோசமா அனுப்பி வைப்பாங்க.
இனியன்: இங்க ஒரு twist இருக்குது. திடீர் திடீர் ன்னு மழை பெய்யுது, இல்லையா...
மித்ரன்: ஆமாம். Weekend ல போக முடியுமா இல்லையா என்பது வெளியில் உள்ள weather ஐ பொறுத்தது.
பாட்டி: Wow அருமையான வாக்கியம் இது ன்னு உங்களுக்கு தெரியுமா?
இனியன்: எப்படி சொல்லுறீங்க பாட்டி?
பாட்டி: ஒரே pronunciation இல் வரக்கூடிய வார்த்தைகள் இதுக்குள்ள மறைஞ்சிருக்குது.
உமையாள்: Weather உம் whether உம் தானே?
பாட்டி: Exactly. Whether we can go on the weekend or not depends on the weather outside.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்