உலகம் - நாளை - நாம் - 39: நைல் நதி புகழ் பாடும் துதிப்பாடல்

உலகம் - நாளை - நாம் - 39: நைல் நதி புகழ் பாடும் துதிப்பாடல்
Updated on
1 min read

நைல் நதியின் வடிகால் படுகை 32.54 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆப்பிரிக்காவின் 10% ஆகும். இந்த நைல் நதியின் மூலம் டானா ஏரி. எத்தியோபியாவின் கிஷ் அபய் மண்டலத்தில் உள்ளது. ஆனால், வெள்ளை நைல் நதியின் உற்பத்திப் புள்ளி குறித்து, உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

உகாண்டா நாட்டின் ஜின்ஜாவில் உள்ள ரிப்பன் அருவியில் உள்ள லேக் விக்டோரியாவில் இருந்துதான் வெள்ளை நைல் நதி வெளியேறுகிறது. மசுண்ட்ரி துறைமுகம், கருமா அருவி, முர்சிசன் அருவி வழியே ஆல்பர்ட் ஏரியை அடைகிறது. இது, காங்கோ எல்லையில் உள்ளது. இங்கிருந்து செல்லும் பகுதி ஆல்பர்ட் நைல் எனப்படுகிறது.

இதன் பிறகு, சூடான் நாட்டில் நாசர் ஏரியில் நுழைகிறது. இந்த ஏரியின் பெரும் பகுதி எகிப்தில் இருக்கிறது. உலகில் மனிதன் உருவாக்கிய பெரும் ஏரிகளில் ஒன்று நாசர் ஏரி. இந்த ஏரி குறித்துப் பிறகு ஏரிகள் பகுதியில் பார்ப்போம். பல தேர்வுகளில் இந்த ஏரி குறித்த கேள்விகளை எதிர்பார்க்கலாம்.

வெள்ளை நைல் நதியின் இரண்டு முக்கிய கிளை ஆறுகள் ‘பாஹர் அல் கசல்’; சோபாத் ஆறு. இதே போன்று மஞ்சள் நைல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாய் சொல்லப்படுகிறது. உலகெங்கிலும், இப்படிப் பல ஆறுகள் முன்பொரு காலத்தில் இருந்ததாய் சொல்லப்படுவதுண்டு. இதன் மிச்சம்தான் வாடி ஹோவர். இது கிழக்கு ‘சாட்’ அருகே செல்கிறது.

கற்காலத்தில் இருந்தே எகிப்திய நாகரிகத்தின் முக்கிய பகுதியாக நைல் நதி இருந்துள்ளது. அவ்வளவு கிஸா பிரமிடுகள் ஒரு காலத்தில் நைல் நதியைப் பார்த்தபடி இருந்தனவாம். இப்போது இல்லை.

நைல் நதி 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றுகூட சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு. எகிப்தைப் பொருத்தவரை, நைல் நதியை, இயற்கை தந்த கொடையாகவே பார்க்கிறார்கள். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம், ஏராளமாக வண்டல் மண்ணைக் கொண்டு சேர்த்துவிட்டுப் போகிறது. இந்த மண் மிக வளமையானது. அதனால் வேளாண் உற்பத்தி மிக செழிப்பான நிலையில் இருக்கிறது. இதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக தனியே நைல் துதிப்பாடல் இருக்கிறது.

(பயணிப்போம்)

கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in