

இசை: என்ன மித்ரன், காலையிலே செம்ம Energetic ஆ இருக்குற.
மித்ரன்: Night நல்ல தூங்கிட்டேன்.
இனியன்: எப்படி?
மித்ரன்: எங்க அம்மா ஒரு கதை சொன்னாங்க. அதை அப்படியே கேட்டுட்டு தூங்கிட்டேன்.
இனியன்: ஆமாம் எனக்கும் கதை கேட்டுட்டே தூங்குறது அவ்வளவு சுகமாக இருக்கும்.
பாட்டி: மறுநாள் காலையில் உற்சாகமாக எழும்ப நல்ல கதைகள் நமக்கு உதவும் தெரியுமா?
மித்ரன்: அப்படியா பாட்டி. அதனால் தான் நான் இவ்வளவு உற்சாகமாக இப்போது இருக்கிறேனா?
பாட்டி: ஆமாம். இதை heal என்று சொல்லலாம்.
உமையாள்: இன்னொரு “ஹீல்” ம் இருக்குது.
இசை: எனக்குத் தெரியும். Heel குதிகால்.
இனியன்: எனக்கும் தெரியும். He’ll. He will ன் சுருக்கம்.
பாட்டி: Awesome dears.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்