வேலைக்கு நான் தயார் - 24: கப்பலில் பணிபுரிய ஆசையா?

வேலைக்கு நான் தயார் - 24: கப்பலில் பணிபுரிய ஆசையா?
Updated on
1 min read

நான் பிளஸ் 2 படிக்கிறேன். எனக்கு கப்பல் ஓட்டும் அதிகாரியாக வேண்டுமென்கிற ஆசை. அதற்கு தனியாக பொறியியல் படிப்பு படிக்க வேண்டுமா? - மு.இராஜேந்திரன், தரங்கம்பாடி.

கப்பலை ஓட்டுவது என்பது வேறு. கப்பலை எப்பொழுதும் இயங்கும் நிலையில் பராமரித்து வருவது என்பது வேறு. இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு படிப்புகள் உள்ளன. கப்பல் ஓட்டுவதற்கு பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் படிக்க வேண்டும். அதுபோல கப்பலை பழுதின்றி இயங்கும் நிலையில் வைத்திருக்க பி.இ. மரைன் இஞ்சினியரிங் படிக்க வேண்டும். இதனை இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான இந்தியன் மாரிடைம் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம். சென்னை, மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அரசு கல்வி நிறுவனம் தவிர பல தனியார் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் இப்படிப்புகளை வழங்குகின்றன.

மகாராஷ்டிரா புனேவில் உள்ள டொலானி மேரிடைம் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழகத்தில் சென்னை கானத்தூர் பகுதியில் உள்ள அமெட் (AMET) போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் இப்படிப்புகளை வழங்குகின்றன. வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் மதுரை மற்றும் பல பொறியியல் கல்லூரிகள் இப்படிப்பினை தமிழ்நாட்டில் வழங்குகின்றன. அதுமட்டுமின்றி நீங்கள் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருப்பின் அதன் பின்னர் 1 வருட கிராஜீவேட் மரைன் இஞ்ஜினியரிங் படிப்பினை படித்துவிட்டு கப்பல்களில் பணிக்கு செல்லலாம். இப்படிப்பினை நாடு முழுவதும் உள்ள கடற்சார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in