

ரேஷ்மி யாஷ்மியும் நெருங்கிய தோழிகள். கடவுள் பக்தி அதிகம். சாலையில் செல்லும் போது தெருவோர மக்களுக்கு உதவுவதே கடவுளுக்கு செய்யும் தொண்டு என ரேஷ்மி நினைப்பாள். யாஷ்மி மலர் மாலை வாங்கி சாமிக்கு சாத்துவதும் அங்கபிரதட்சனம் செய்வதும் கடவுளுக்கு செய்யும் தொண்டாக நினைத்தாள். இரவு நேரம் வழிபோக்கர் ஒருவன் வந்து குளிராக உள்ளது ஒரு கம்பளி தர முடியுமா? என்று கேட்டான். போ போ உழைத்து சம்பாதித்து வாங்கிக் கொள் என்றாள். ரேஷ்மி யாரைப் பார்த்தாலும் இரக்கப்படுவாள். ஒரு நாளைக்கு ஒருவேளை கூட உணவு எடுத்து வராத பாத்திமாவுக்கு அம்மாவிடம் சொல்லி உணவு எடுத்துச் செல்வாள். மக்களுக்கு உதவுவதைவிட தெய்வத்துக்கு சேவை செய்வதே மேல் என்ற எண்ணம் யாஷ்மிக்கு உண்டு.
இருவருக்கும் காட்டு முயல் பார்க்க ஆசையாக இருந்தது பார்க்கும் ஆவலில் நெடுந்தூரம் வந்துவிட்ட னர், இருட்டிவிட்டது. யாஷ்மி கடவுளே கடவுளே காப்பாத்து என்று வேண்டினாள். ரேஷ்மி அதோ பார் ஒரு பெரியவர் முயலோடு வருகிறார் அவரிடம் உதவி கேட்போம் என்றாள். கடவுள் காப்பாற்றாமல் இந்த மனிதரா காப்பாற்றுவார் என்ற அலட்சியம் யாஷ்மிக்கு. குழந்தைகளா பயப்படாதீர்கள் வாங்க உங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்றார். வந்தது யாருமில்லை மனிதர் உருவத்தில் கடவுள்தான் என்று ரேஷ்மி சொன்னாள். கடவுளுக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு கிடையாது. எல்லோரிடமும் அன்பானவர் இதைத்தான் வள்ளுவர்
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இரும்பை இல என்றார்
(குறள்:4 அதிகாரம்:1 கடவுள் வாழ்த்து)
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்