உலகம் - நாளை - நாம் - 36: நதியோரம் திழைக்கும் நாகரிகம்!

உலகம் - நாளை - நாம் - 36: நதியோரம் திழைக்கும் நாகரிகம்!
Updated on
1 min read

இன்னையில இருந்து நாம் ‘நீரோடும் பாதை ’ பார்க்கப் போறோம்… எப்பவும் போல ஒரு கேள்வியோடவே தொடங்குவோம். நீர் நிலைகள்னு சொல்றோம் இல்லையா, எதெல்லாம் இதுல அடங்கும்? அதாவது…நீர் நிலைகள்னு சொன்னா எதெல்லாம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வருது? கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய், வாய்க்கால், அருவி... இவ்வளவுதானா, இன்னும் எதும் இருக்கா? யோசிச்சுப் பாருங்க… முக்கியமா ஒண்ணு மறந்துட்டீங்களே. சதுப்பு நிலங்கள்.

அது நீர்நிலை இல்லையே...கடலோட ‘பேக் வாட்டர்’ தானே?

ஒருவேளை ஊற்று? பிரமாதம். இன்னும்… இன்னும்… வேற ஒண்ணு இருக்கு… சொல்லட்டுமா..? அணை! அப்புறம். முக்கியமா… கிணறு. ஆமா… சார், மறந்துட்டோம்…

பரவாயில்லை. இப்பொ நீங்க சொன்னதுல சிலது நீர் நிலை இல்லை. யோசிச்சுப் பாருங்களேன்… நீர் நிலைன்னு சொன்னா என்ன அர்த்தம், தண்ணீர் ஓர் இடத்தில் நிலையாக இருப்பதுதானே? அப்புறம் ஆறு, அருவி இங்கெல்லாம் தண்ணீர், நிலையா நிற்குமா? இல்லையே. தண்ணீர் இயல்பாவே ஒரே இடத்துல இருக்காது. ஓடிக் கிட்டேதான் இருக்கும். ‘ நீர் நிலை’ அப்படின்னாலே அநேகமா அது இயல்புக்கு மாறானதா இருக்கு. அப்படினா நிர்நிலைங்கறது இயற்கையானதா இருக்காது. மனிதன் ஏற்படுத்தியது. அப்படிதானே சார்?

அற்புதம்… நல்லா தெளிவா யோசிக்கிறீங்க. ஒரு விதத்துல கடல். பெருங்கடல், நிலையானதுதான்… அது இயற்கையான நீர்நிலை. மற்றபடி எல்லாமே நீங்க சொன்னது போல மனிதன் செய்த ஏற்பாடுதான். இப்ப நாம், ‘நிலையில்லாத’ நீர் பற்றிதான் பார்க்கப் போறோம். அதாவது, ஆறு, அருவி இதெல்லாம். முதல்ல, உலகத்துல இருக்கிற முக்கியமான ஆறுகள் பற்றிப் பார்க்கப் போறோம்.

ஆறு... நிலையில்லாததுன்னு சொல்றது சரிதான் சார். ஆத்துல எப்ப தண்ணி வரும்னு யாருக்குமே தெரியாது… ஆறுகள் பற்றி ஏற்கெனவே பார்த்து இருக்கோம். அது அநேகமா இந்திய ஆறுகள். இனி நாம் உலக ஆறுகள் சிலவற்றைப் பார்க்கப் போறோம். உலகம்னாலே நாம் எங்கிருந்து தொடங்குவோம், ஆப்பிரிக்கா’?

ஆமாம். நம் இதயத்துக்கு நெருக்கமான ஆப்பிரிக்காக் கண்டத்துல இருந்துதான் புவியியல் தொடர்பான எதையும் தொடங்கணும். வாங்க பார்க்கலாம்… ஆப்பிரிக்க ஆறுகள்.

இந்த வாரக் கேள்வி

‘நாகரிகம்’ என்கிற அடைமொழியுடன் நமக்கு நன்கு பரிச்சயமான ஆப்பிரிக்க ஆறு எது?

(பயணிப்போம்)

- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in