கனியும் கணிதம் 44: நாட்காட்டி எண்கள்

கனியும் கணிதம் 44: நாட்காட்டி எண்கள்
Updated on
2 min read

நாட்காட்டியில் இருக்கும் எண்களை வைத்தே நிறையச் சுவாரஸ்யங்களை கவனிக்கலாம். எண்கள் என்றாலே சுவாரஸ்யமும் கூடவே வந்துவிடும் அல்லவா? ஒரு மாத நாட்காட்டியில் எத்தனை வரிசை, எத்தனை நெடுவரிகள் இருக்கின்றன? நாட்காட்டியைப் பார்க்காமல் சொல்லுங்கள் பார்ப்போம். வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பதால் கட்டாயம் 7 வரிசைகள் இருக்க வேண்டும். அப்படி எனில் எத்தனை நெடுவரிசைகள். மாதத்தில் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை, 28,29 (லீப் வருடங்களில் மட்டும்), 30, 31. அதிகபட்சமாக 31 நாட்கள்.

1 நெடுவரிசை எனில் 7 X 1 = 7

2 நெடுவரிசை எனில் 7 X 2 = 14

3 நெடுவரிசை எனில் 7 X 3 = 21

4 நெடுவரிசை எனில் 7 X 4 = 28

5 நெடுவரிசை எனில் 7 X 5 = 35

எனவே 31 நாட்களையும் காட்டவேண்டு மெனில் 5 நெடுவரிசைகள் தேவை. இப் போது உங்கள் நாட்காட்டியை பாருங்கள் 7 வரிசைகளும் 5 நெடுவரிசைகளும் இருக்கும், இல்லையெனில் 7 நெடுவரிசைகளும் 5 வரிசைகளும் இருக்கும். 4 அல்லது 5 பெட்டிகள் காலியாக இருக்கும். அது மாதத்தை பொறுத்தது.

பகா எண்: எந்த மாதத்தில் அல்லது எந்தெந்த மாதங் களில் அதிகபட்ச பகா எண்கள் இருக்கும்? பகா எண் (Prime Number) எனில் அந்த எண், அதே எண் மற்றும் எண் 1 ஆல் மட்டுமே வகுபடும்.

1-31 வரையில் எதெல்லாம் பகா எண்கள் 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31,

ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் - இந்த மாதங்களில் 31 நாட்கள் ஆகவே 11 பகா எண்கள்

பிப்ரவரியில் 28 நாட்கள் - 9 பகா எண்கள். ஏப்ரல், ஜூன், செப்டம்பர், நவம்பர் – 30 நாட்கள் – 10 பகா எண்கள். லீப் வருடத்தில் பிப்ரவரியில் 29 நாட்கள் – 10 பகா எண்கள்.

சின்ன சேட்டை: பழைய மாதாந்திர நாட்காட்டியை எடுத்துக் கொள்ளவும். ஒரு மாத நாட்களில் எந்தெந்த எண்கள் எல்லாம் பகா எண்களோ அதனைச் சுழிக்கவும். இப்போது 4,6, 12, 18, 30 ஆகிய ஒற்றுமை இருப்பது தெரிகின்றதா? என்ன எல்லாமே சுழிக்கப்படவில்லையா – சரி

2 / 2

எல்லாமே இரண்டால் வகுபடுகிறது – சரி. இன்னும் ஓர் ஒற்றுமை இருக்கு. அந்த சுழிக்கப்பட்ட நாட்காட்டியில் கவனிக்கலாம். இந்த எண்களுக்கு முன்னும் பின்னும் பகா எண். அதே தான்.

பகா – 4 – பகா

பகா – 6 – பகா

பகா – 12 – பகா

பகா – 18 – பகா

பகா – 30 – பகா.

திரும்பவும் சுழித்த நாட்காட்டியைப் பார்த்து எந்த எண்கள் எல்லாம் தொடர்ச்சியாகச் சுழிக்கப்படாமல் இருக்கு அல்லது எந்த எண்கள் எல்லாம் தொடர்ச்சியாகக் கூட்டு எண்களாக உள்ளன? 5,6,7,8 – இதில் 5-ம், 7-ம் பகா எண் ஆச்சே? 12,13,14,15 – இதில் 13 பகா எண் ஆச்சே? 24,25,26,27,28 – இதுதான் நாட்காட்டியில் தொடர்ச்சியாகக் கூட்டு எண்களாக இருக்கும் எண்கள் நீங்கச் சுழித்த பின்னர் இன்னும் பலவற்றைக் கண்டுபிடிப்பீர்கள் பாருங்கள்.

கேள்வி: நீங்கள் பிறந்தது முதல் இதுவரை எத்தனைமாதாந்திர நாட்காட்டிகளைக் கடந்திருக்கின் றீர்கள்? உங்கள் வயது என்னவென்றால் 12 ஆக் கூட்டிச் சொல்லிவிடுவீர்கள். ஆனால் எத்தனை மாதம் கடந்துள்ளீர்கள்? அக்டோபர் 15-ல் பிறந்தால் அந்த ஒரு மாதத்தைப் பார்த்து விட்டீர்கள் என்று துல்லியமாகக் கணக்கிட்டு உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.

- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in